கங்குவா படத்தில் இவர் தான் வில்லனா? சைலன்ட்டாக சிறுத்தை சிவா செய்யப் போகும் சம்பவம்

by Saranya M |
கங்குவா படத்தில் இவர் தான் வில்லனா?  சைலன்ட்டாக சிறுத்தை சிவா செய்யப் போகும் சம்பவம்
X

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான கங்குவா படத்தில் வில்லனாக பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவர் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானி நடித்து வருவதை மட்டுமே இதுவரை படக்குழு ரிவீல் செய்திருந்தது. மேலும், சீதாராமம் பட நடிகை மிருணாள் தாகூர் இந்த படத்தின் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இதுவரை சூர்யாவுக்கு வில்லனாக கங்குவா படத்தில் யார் நடிக்கிறார் என்பதை இயக்குநர் சிறுத்தை சிவா ரகசியமாக வைத்திருந்த நிலையில், சமீபத்தில் ஊட்டியில் நடந்த ஷூட்டிங் மூலம் அந்த ரகசியம் அம்பலம் ஆகி உள்ளது.

சூர்யாவுக்கு கம்பேக் கொடுக்குமா கங்குவா:

நடிகர் சூர்யாவுக்கு கங்குவா திரைப்படம் கம்பேக் படமாக அமையுமா என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக சாதிக்கவில்லை. அதற்கு முன்னதாக சூர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட 2 நல்ல படங்களும் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில், வசூல் வேட்டை நடத்த முடியாமல் போய் விட்டது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் நடிகர் சூர்யா ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கூட கொடுக்க முடியாமல் தவித்து வரும் நிலையில், கங்குவா படமாவது அவருக்கு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில்:

தம்பி கார்த்தியின் சிறுத்தை படத்தை இயக்கி சிறுத்தை சிவா என்றே இன்னமும் ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் சிறுத்தை சிவா அடுத்ததாக அண்ணன் சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கி வருகிறார்.

பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாக வரலாற்று படம் போல உருவாகி வரும் கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிகினி குயின் திஷா பதானி நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் வில்லனாக யார் நடித்து வருகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

கங்குவா படத்தின் வில்லன் இவர்தான்:

தனுஷின் கர்ணன் படத்தில் வில்லனாக நடித்த பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் தான் சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடித்து வருகிறாராம். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் கண்ணபிரான் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து பலரது எதிர்ப்புகளை சம்பாதித்த நட்டி நட்ராஜ் இந்த படத்தில் பீரியட் போர்ஷனில் வில்லனாக நடித்து வருவதாகவும், இந்த படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story