சினிமாவில் சாதிக்க அழகு வேண்டாம்!.. நடிப்பில் ஸ்கோர் செய்த நடிகைகளின் பட்டியல்...
திரையுலகை பொருத்தவரை அழகோடு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும்தான் வெற்றி அடைய முடியும் என்ற ஃபார்முலாவை தகர்த்து எறிந்த சில நடிகைகள், நடிப்பு மட்டும் இருந்தால் போதும் சினிமாவில் சாதிக்கலாம் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார்கள்.
இதுவரை பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சாய் பல்லவி அந்த அளவு மேக்கப்புக்கு முக்கியத்துவம் தராமல் இயற்கையான வகையில் நடித்து வெற்றியை பெற்று இன்று முன்னணி கதாநாயகியாக தென்னிந்திய திரைப்படங்களில் வலம் வருகிறார். 26 படங்களில் நடித்த இவர் 20 படங்களில் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அந்த விருதுகளை வென்றவர்.
அடுத்ததாக டஸ்கி ஸ்கின் அழகி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ். இளம் வயதிலேயே காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் அம்மாவாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த இவர் அழகுக்கு முக்கியத்துவம் தராமல் அந்த கேரக்டருக்கு உரிய முக்கியத்துவத்தை தந்து திரையுலக வாழ்க்கையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.
மூன்றாவதாக நடிகை அபர்ணா பாலமுரளியை கூறலாம். இவரும் அலட்டிக் கொள்ளாமல் இயற்கை அழகோடு காட்சி தருபவர். நடிப்பிலும் அனைவரையும் சொக்க வைக்க கூடிய வகையில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுவார். இவர் நடிப்பில் வெளிவந்த சூழலைப் போற்றப்படும் இவருக்கு நேஷனல் விருதை பெற்று தந்தது. எட்டு தோட்டாக்கள் மற்றும் இவர் நடித்த படங்களை பாருங்கள் நிச்சயமாக இவரது நடிப்பு உங்களுக்கு பிடிக்கும்.
இவரை அடுத்து நடிகை நித்யா மேனனை கூறலாம். இவர் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருந்தாலும் இருப்பவர். அதிக உயரம் இல்லை எனினும் இவரிடம் இருக்கும் நடிப்புத் திறனை பயன்படுத்தி பல படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் மலையாளத்தில் முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். ஒன்பது அவார்டுகளை இவர் பெற்றிருக்கிறார்.
இனிமேல் அழகு மட்டும்தான் திரைத்துறைக்குத் தேவை என்று கூறுபவர்கள் இவர்களைப் போன்று திறமையால் சாதித்தவர்களை நினைத்துப் பார்த்தால் போதும் என் நிச்சயமாக உங்களால் சாதிக்க முடியும். என்பதற்கு ஊக்கம் தரக்கூடியவர்களாக இவர்கள் திகழ்வார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
இதையும் படிங்க: சினிமாவில் சாதிக்க அழகு வேண்டாம்!.. நடிப்பில் ஸ்கோர் செய்த நடிகைகளின் பட்டியல்…