More
Categories: Cinema History Cinema News latest news

உலகம் முழுவதும் பிரமிப்பை ஏற்படுத்திய செவாலியே சிவாஜியின் நவராத்திரி

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களில் ரொம்பவே சவாலான படம் நவராத்திரி. ஏன்னா அந்தக்காலத்திலேயே முற்றிலும் மாறுபட்ட 9 வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். அதனால் இந்தப்படத்தை பலதரப்பட்ட ரசிகர்களும் இன்று வரை ரசித்து வருகின்றனர் என்றால் மிகையில்லை.

1964ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். தனது கேரக்டர்களின் வாயிலாக கோபம், பயம், சாந்தம், அற்புதம், வெறுப்பு, சிங்காரம், இரக்கம், வீரம், ஆனந்தம் என நவரசங்களையும் சிவாஜி தத்ரூபமாகக் காட்டி அசத்தியிருப்பது படத்தின் தனிச்சிறப்பு.

Advertising
Advertising

2007ல் சிவாஜி நடித்த டாப் டென் திரைப்படங்களில் நவராத்திரியும் ஒன்று. மாலதி ரங்கராஜன் கூறும்போது ஒருவர் ஒரு கேரக்டர் பண்ணுவதே பெரிசு. ஆனா 9 கேரக்டர் பண்ணியிருக்கார் எனில் அது பெரிய விஷயம் என்கிறார்.

இந்தப்படத்தைப் பற்றி இந்து பத்திரிகையின் ராண்டார்கை விமர்சகர் இவ்வாறு கூறுகிறார். படத்தோட ஒளிப்பதிவாளர் சுப்பாராவ் ரொம்ப அழகா ஒர்க் பண்ணியிருக்கிறார். எடிட்டிங்கை ராஜன் வெகு நேர்த்தியாக செய்துள்ளார். உதாரணமாக ஒரு கட்டத்தில் 7 சிவாஜியும் ஒன்றாக இருப்பார்கள். அது போன்ற காட்சியை சூப்பராக வடிவமைத்துள்ளார்.

கலை பிரசாத்தும் அருமையாக செய்துள்ளார். கே.வி.மகாதேவனின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் வேற வேற ஜேனரில் வரும். குறிப்பாக இரவில் நிலாட்டம் பகலினில் தூக்கம் என்ற பாடல் ரொம்பவே அற்புதமாக இருக்கும்.

இந்தப்படம் தெலுங்கில் நவராத்திரி படத்தை நாகேஸ்வரராவ் கதாநாயகனாக நடிக்க சாவித்திரி கதாநாயகியாக நடித்துள்ளார். நகைச்சுவை வேடத்திற்கு நாகேஷ். பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் மனோகரமா, ஈ.வி.சரோஜா உள்பட பலர் நடித்துள்ள நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கும்.

சாவித்திரி பைத்தியக்கார ஆஸ்பத்திரில நடிக்க ஒரு நாள் கால்ஷீட் கொடுத்தாங்க. அந்தக்காட்சில நடிச்சதுக்காக சாவித்ரி ஒவ்வொரு மோதிரமும் பணமும் தட்டுல வச்சி எல்லாருக்கும் கொடுத்துருக்காங்க.

navarathiri Savithri, Sivaji

சாவித்ரி அந்த அளவு நல்ல வசதியாக இருந்தாங்க. தெலுங்குல அந்த பைத்தியக்கார கேரக்டர்ல ஜெயலலிதா, காஞ்சனா, ஜமுனா எல்லாரும் கெஸ்ட் ரோலில் நடித்தார்கள்.

இந்தியில் இதே படம் ரீமேக் செய்யும்போது பீம்சிங் தான் இயக்கினார். இவர் ஏற்கனவே பாசமலர், பார்த்தால் பசிதீரும் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

அங்கு இந்தப்படத்தின் பெயர் நயாரா. முதலில் இந்தப்படத்தில் நடிக்க இருந்தது திலீப் குமார். அவர் சஞ்சீவ் குமாரை சிபாரிசு பண்ணுகிறார். கடைசியில் சஞ்சீவ் குமார் தான் பண்ணினார். ஆனால் அவரே சிவாஜி அளவுக்கு என்னால் பண்ண முடியாது.

9 sivajis

ஆனாலும் பண்றேன் என்றார். இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதுமே எடுத்துக் கொண்டாலும் சிவாஜி அளவுக்கு நடிப்பதற்கு எந்த நடிகரும் இல்லை. இதை எந்த நடிகரைக் கேட்டாலும் ஒத்துக் கொள்வார்கள்.

இந்தப்படத்தில் சிவாஜியின் கதாபாத்திரங்கள் அந்த அளவுக்கு ரசிக்கப்பட்டது. 2012ல் ரீரிலீஸ் பண்ணியிருக்காங்க. அப்பவும் அந்த அளவுக்கு படம் சக்கை போடு போட்டது.

நவராத்திரி படத்தை எடுத்துக்கொண்டால் படத்தின் இயக்குனர் ஏபி.நாகராஜன். அவருக்கு நிகர் அவர் தான். அந்த அளவு படத்தை ஒரு சூப்பர்ஹிட்டாக இயக்கியுள்ளார்.

இந்தப்படம் பழமையில் ஒரு புதுமையை உருவாக்கியிருக்கிறது. ஏன்னா அந்தக்காலத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எதுவுமே இல்லாமல் அருமையாக படம் எடுத்துள்ளார்கள் என்றால் ஆச்சரியம் தான்.

Published by
sankaran v

Recent Posts