நயனும் சிம்புவும் சேர்ந்து செய்த சில்மிஷம்!.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் வதந்திகளுக்கு பேர் போன ஆன் ஸ்கீரின் ஜோடி என்றால் அது நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சிம்பு. இவர்கள் சேர்ந்து நடித்த ‘வல்லவன்’ படத்தில் இருந்தே அவர்களைப் பற்றிய பல கிசுகிசுக்கள் சினிமா உலகில் வேகமாக பரவி வந்தன.
அதை நிரூபிக்கும் வகையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களும் இணையத்தை அலங்கரித்து வந்தன. இருவரும் காதலிப்பதாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. அதை உண்மையாக்கும் விதத்தில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவே பல மேடைகளில் பல பேட்டிகளில் சிம்பு பேசியிருக்கிறார்.
இந்த சம்பவங்களாலேயே சிம்பு சில வருடங்கள் சினிமாவை விட்டு விலக வேண்டியிருந்தது. இதனிடையில் உடல் எடை அதிகரித்து பார்க்கவே இனிமேல் சிம்பு அவ்ளோ தான் என்று சொல்லுமளவிற்கு இருந்தார். ஆனாலும் திரும்பவும் கெத்தாக வந்து இறங்கினார். இன்று வரை பத்து தல படம் வரைக்கும் அவரின் விடாமுயற்சியை நம்மால் காணமுடிகிறது.
வல்லவன் படத்திற்கு பிறகு சிம்புவும் நயனும் மீண்டும் இணைந்த படம் ‘இது நம்ம ஆளு’ திரைப்படம். அந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் இருவரை பற்றியும் தயாரிப்பாளரான பி.எல்.தேனப்பன் ஒரு பேட்டியில் கூறினார்.
இது நம்ம ஆளு படப்பிடிப்பின் போது நயன்தாரா சில சில்மிஷங்களை செய்வாராம். பொதுவாக பி.எல்.தேனப்பன் அவரது போனை யாரிடமும் கொடுக்க மாட்டாராம். ஆனால் நயன் மிகவும் நெருக்கமாக பழகக்கூடியவர் என்பதால் ஒரு நாள் இரவு அவரது போனை வாங்கியிருக்கிறார்.
இதையும் படிங்க : ‘பத்து தல’ படத்திற்கு நான் ஏன் கம்போஸ் பண்ணேன்?.. காரணத்திற்கான ரகசியத்தை பகிர்ந்த இசைப்புயல்..
அவரும் போனை கொடுத்திருக்கிறார். வாங்கிய நயன் சிம்புவுடன் சேர்ந்த் நடிகை கோபிகாவுக்கு ‘ஐ லவ் யூ’ என்ற மெசேஜை தட்டி விட்டிருக்கிறார்கள். மேலும் அனுப்பிய குறுஞ்செய்தியை அழித்தும் விட்டிருக்கின்றனர். மறு நாள் கோபிகா பி.எல்.தேனப்பனிடம் ‘ஏன் சார் அப்படி ஒரு மெசேஜை அனுப்பினீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சத்தியமாக நான் இல்லை என்று சொல்லி யோசித்து பார்த்தாராம். அப்போது தான் இரவு சிம்புவும் நயனும் சேர்ந்து தன் போனில் இருந்து அனுப்பியதை தெரிந்து கொண்டாராம்.இப்படி நயன் அடிக்கடி இந்த மாதிரி சேட்டைகள் எல்லாம் செய்வாராம். இதை ஒரு பேட்டியின் போது பி.எல்.தேனப்பன் கூறினார்.