விக்கிக்கு புதிய பொறுப்பை கொடுத்து உட்கார வைத்த நயன்! டைரக்ஷன் அவ்ளோதானா!
திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் அதே புதுப்பொலிவுடன் புதுமண தம்பதிகளாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் நடிகை நயன் மற்றும் விக்கி ஜோடி. தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கெடுத்து காட்டுபவர் நடிகை நயன்தாரா. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நயன்தாரா.
இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து பின்னர் கரம் பிடித்தார். இருவருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில் நயன் மறுபடியும் சினிமா மீது ஆர்வம் காட்ட தொடங்கி விட்டார். ஒரு பக்கம் குழந்தைகள் ஒரு பக்கம் குடும்பம் ஒரு பக்கம் தனது கரியர் என முழுமூச்சுடன் இறங்கி இருக்கிறார் நயன்தாரா.
விக்னேஷ் சிவனை பொறுத்த வரைக்கும் அஜித்தின் படம் கைவிட்டுப் போன நிலையில் இதுவரை எந்த வாய்ப்புகளும் இல்லாமல் அமைதியாகவே இருந்து வருகிறார். இதனிடையில் பிரதீப் ரங்க நாதனை வைத்து விக்னேஷ் ஒரு படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகின.
இந்நேரம் அந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு முடியும் தருவாயில் இருக்க வேண்டியது ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்தப் படமும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் விக்னேஷ் சிவனை பற்றிய ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆகின்றது. அதாவது கேரளாவில் நயன்தாரா ஹைரைஸ் அப்பார்ட்மெண்ட் ஒன்றை கட்டிக்கொண்டு வருகிறாராம். அந்த பில்டிங் பொறுப்பை முழுவதையும் விக்னேஷ் சிவன் இடமே ஒப்படைத்து இருக்கிறாராம் நயன்.
10, 20 குடியிருப்புகள் என்றால் பரவாயில்லை. கிட்டத்தட்ட 150 குடும்பங்கள் வகிக்கும் ஒரு லக்சூரி அப்பார்ட்மெண்டாக அந்த பில்டிங் இருக்கப் போவதால் அதனுடைய வரைபட பொறுப்பு எல்லாவற்றையும் விக்னேஷ் சிவனே பார்க்க இருக்கிறாராம்.
இது ஒரு பிசினஸ் ஆகவே இருவரும் சேர்ந்து பார்க்கப் போகிறார்களாம். மேலும் ஏற்கனவே சம்பாதித்து வைத்த பணத்திலிருந்து இந்த மாதிரி அப்பார்ட்மெண்டுகளை கட்டுவதற்கு பதிலாக இனிமேல் சினிமாவில் நடித்து அதன் மூலம் வரும் சம்பளத்தை வைத்து தான் இந்த ஒரு பிசினஸை வளர்க்க வேண்டும் என்ற ஒரு முடிவில் இருப்பதால் எல்லா மொழி சினிமாக்களிலும் நடிப்பை தொடங்குவது என்ற யோசனையில் இருக்கிறாராம்.
அதன் விளைவாக இவர் தயாரிப்பு மற்றும் நடிப்பில் சக்க போடு போட்ட அறம் படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறாராம் நயன். அதாவது அதனுடைய இரண்டாவது பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : சுயரூபத்தை காட்டிய வடிவேலு!.. தக்க பதிலடி கொடுத்த விவேக்!.. என்ன நடந்தது தெரியுமா?..