லெஜண்ட்க்கு மட்டுமல்ல பிரபல இயக்குனருக்கும் அல்வா தந்த நயன்தாரா!... ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுங்கோ…
Nayanthara: நயன்தாரா நேரம் சரியில்லை போல தொடர்ந்து அவரை பற்றிய நெகட்டிவ் செய்திகளே அதிகமாக கசிந்து வருகிறது. அந்த வகையில் லெஜண்ட் சரவணா முதல் தன்னை வளர்த்த இயக்குனர் ஹரி வரை அம்மணி காட்டிய திமிர்த்தனங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக கருதப்படுபவர் நயன்தாரா. ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த அவரின் சினிமா கேரியர் தற்போது மிகப்பெரிய சறுக்கலை சந்தித்து இருக்கிறது. அருந்ததிக்கு பிறகு தனிநாயகியாக ஒரு நடிகை நடித்தாலும் அப்படம் ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் நயன்தாரா.
இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருதுக்கு சோக்கா போஸ் தந்த நயன்தாரா… முழுசா சொல்லாமல் ஊழலா செய்றீங்க?
ஹீரோக்களுடன் இணைந்து நடித்ததை விட தனிநாயகியாக நயன்தாரா நடித்த திரைப்படத்தின் பட்டியல் அதிகம். ஒரு கட்டத்தில் அப்படங்கள் ஹிட் கொடுத்தாலும் சமீபத்திய காலங்களில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. கிட்டத்தட்ட அவரின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தையே ரசிகர்கள் கலாய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
சினிமா கேரியர் ஆட்டம் கொண்டிருக்கும் நிலையில் நயன்தாரா மேக்கப், பெண்களின் சானிட்ரி நாப்கின் உள்ளிட்ட சில தொழில்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் நயனின் கேரியர் மிகப்பெரிய அடியை வாங்கி இருக்கிறது. முன்பாக, நயன்தாரா உச்சத்தில் இருக்கும் போது சில இயக்குனர்களிடம் காட்டிய ஓவர் ஆட்டிடியூட் தான் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.
அதாவது லெஜண்ட் படத்தில் முதல் முதலில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவை தான் படக்குழு அணுகி இருக்கிறது. அப்போது அவர் வாங்கிய இரண்டு கோடி சம்பளத்தை 5 மடங்கு அதிகமாக தருவதாகவும் கூறப்பட்டதாம். ஆனால் தனக்கு 100 கோடி கொடுத்தாலும் அந்தப் படத்தில் நடிக்க விருப்பமில்லை என நயன் விலகிவிட்டார். இதில் கடுப்பான லெஜண்ட் சரவணா நயனின் ஆடம்பர அப்பார்ட்மெண்டிற்கு முன்னர் இருந்த பிளாட்டை சொந்தமாக வாங்கினாராம்.
இதையும் படிங்க: 24 மணி நேரமும் நான்வெஜ்… ஷூட்டிங்கில் அணையவே கூடாத அடுப்பு… பிரபல இயக்குனர் சொல்லிய கண்டிஷன்…!
அவரிடம் கால்ஷீட் கேட்டுப் போன ஹரியிடம் டேட்களை பிரித்துக் கொடுக்கிறார். ஆனால் ஹரி தொடர்ந்து சில நாட்களைக் கேட்க அதை தன்னால் தர முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டாராம். இதனால் கடுப்பான ஹரி அவருக்கு பதில் பானுவை ஹீரோயின் ஆக களம் இறக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.