Nelson: இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி இருவரின் நட்பும் கோலிவுட்டில் பிரபலம் என்பது அனைவரும் அறிந்த கதை தான். அவரை வைத்து நெல்சன் ஒரு படத்தினை இயக்கும் ஐடியா இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அடிப்படையில் டான்ஸராக இருந்த ரெடின் கிங்ஸ்லியிடம் ஒரு கல்லூரி விழாவுக்கு டான்ஸ் கத்துக்க சென்றவர் நெல்சன் திலீப்குமார். ஆனால் அங்கு யாருக்கும் சரியாக நடனம் வராமல் போக வாங்கிய காசையும் ரெடின் செலவு செய்து விட்டாராம். திருப்பி அனுப்பினால் காசு கொடுக்கணுமே என அவர் குழுவையே மேடை ஏற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க: அண்ணாவைப் பார்க்க முடியாமல் தலைகுனிந்த எஸ்எஸ்ஆர்..! சிவாஜியே வியந்த நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா?
அங்கு தான் ரெடின் மற்றும் நெல்சனுக்கு இடையே நட்பு உருவாகியது. அப்படி அவர் மீது இருந்த நட்பால் தன்னுடைய கோலமாவு கோகிலா படத்தில் ரெடின் கிங்ஸ்லியை அறிமுகம் செய்தார். முதல் படமே நல்ல ஹிட் கொடுக்க அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ரெடினுகு வந்தது.
நெற்றிக்கண், அண்ணாத்தே படங்களில் நடித்தவர். நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட், ஜெயிலர் படங்களிலும் நடித்து இருப்பார். இதில் ஜெயிலர் திரைப்படத்தில் இரண்டாம் பாதியில் தான் எண்ட்ரி கொடுத்து இருப்பார். அப்படத்துக்கு அவருக்கு சம்பளம் மட்டுமே 25 லட்சம் கொடுக்கப்பட்டதாம்.
இதையும் படிங்க: வாடிவாசலில் இவர்தான் நடிக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்.. சூர்யாவையே மிஞ்சிட்டாரே
இதை தொடர்ந்து, சீரியல் நடிகை சங்கீதாவை நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஒரு பேட்டியில் நெல்சனும், ரெடின் கிங்ஸ்லியும் கலந்துக்கொண்டனர். அப்போது நெல்சனிடம் ரெடினை ஹீரோவாக வைத்து படம் இயக்குவீங்களா எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நெல்சன், நானும் அதை அவரிடமே கேட்டேன். ஆனால் இப்போ நடிக்கிற மூட்ல இல்ல. தோணிச்சுனா சொல்றேனு சொல்லி இருக்கார் என்றார். சரி நடிக்க வச்சா யாரை ஹீரோயினா போடுவீங்க எனக் கேட்ட போது அங்கிருந்த ரசிகர்கள் நயன்தாரா எனக் கோஷமிட்டனர். ஆனால் நெல்சன் லாவகமாக மும்பையில் இருந்து இறக்குவோம் எனக் கூறி சமாளித்தார்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…