விக்கியுடன் டூயட் பாடி இயக்குனரை விழிபிதுங்க வைத்த நயன்...! கடைசில எங்க வந்து நிக்குதுனு பாருங்க...

by Rohini |
nayan_main_cine
X

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது
தமிழ் , ஹிந்தி என இரு மொழிகளில் தயாராகி வரும் ஜவான் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஷாரூக்கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

nayan1_cine

படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திருமணத்திற்கு பின் நடிக்கும் முதல் படமாக இந்த படம் அமையும். இந்த நிலையில் நயனை பற்றி ஒரு தகவலை திருநாள் படத்தின் இயக்குனர் ராம்நாத் கூறியிருக்கிறார். திருநாள் படத்தில் நடிகர் ஜீவா, நடிகை நயன்தாரா ஆகியோர் நடிக்க கிராமத்து பின்னனியை மையமாக வைத்து படம் அமைந்திருக்கும்.

nayan2_cine

ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு அப்புறம் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர். முதல் நாள் சூட்டிங்கிலயே நயனுக்கும் இயக்குனருக்கும் இடையே பிரச்சினை முற்றியிருக்கிறது. அதாவது இவர் சம்மதம் தெரிவித்து நிறைய பட செட்யூல்கள் தள்ளிப் போய்க் கொண்டே இருந்திருக்கிறது. இவர் இல்லாத அனைத்து காட்சிகளையும் எடுத்து விட்டாராம் இயக்குனர்.

nayan3_cine

ஏனெனில் பாண்டிச்சேரியில் நானும் ரௌடிதான் படப்பிடிப்பில் விக்கியுடன் பிஸியாக இருந்திருக்கிறார் நயன். அதை முடித்து கொண்டு இவர் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருந்ததாம். இரவு 8 மணிக்கு தான் வந்தாராம்.வந்ததும் உடம்பு சரியில்லை. இருமலாக இருக்கிறது என்று கூற இயக்குனர் ராம்நாத் நயன் சொல்றத கேட்காமல் படப்பிடிப்பில் பிஸியாக இருந்திருக்கிறார். உடனே நயன் என்ன ராம்நாத் நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் . நீங்க எடுத்துக்கிட்டே இருக்கீங்கனு கூறி ஓகே நான் 2 மணி நேரம் வரை இருக்கேன் எடுங்கள் என்று கூறவும் இயக்குனருக்கு அப்செட் ஆகிவிட்டதாம். அதன்பின் சமரசம் செய்து படத்தை எடுத்திருக்கிறார்கள்.

Next Story