சீன் காட்டிய நயன்… குட்டி ஸ்மைலுடன் தனுஷுடன் நின்ற எஸ்கே… இதுதாங்க கெத்து?!!

by Akhilan |   ( Updated:2024-11-22 04:21:06  )
sk_dhanush_nayan
X

sk_dhanush_nayan

Dhanush SK: கோலிவுட்டில் நேற்று நடந்த தயாரிப்பாளர் திருமண விழாவில் நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் சந்தித்துக் கொண்டது வைரலாகி வரும் நிலையில் தற்போது இன்னொரு ஒரு ஆச்சரிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்த நடிகர் தனுஷை எங்கள் மீது பொறாமை இருப்பதால் திருமண டாக்குமெண்டரிக்கு என்ஓசி கொடுக்காமல் இழுத்தடித்த வருவதாக பிறந்த கடிதம் ஒன்றை நடிகை நயன்தாரா எழுதி இருந்தது சர்ச்சையாக மாறியிருந்தது.

இதையும் படிங்க: 30 வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே காதல்!.. இப்ப இன்னும் அதிகமா?!.. யாரப்பா சொல்றாங்க திரிஷா!…

இருந்தும் நயன்தாரா தரப்பு கொடுத்த குற்றச்சாட்டு மீது தனுஷ் தரப்பு இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் நேற்று பிரபல தயாரிப்பாளர் திருமண விழாவில் நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் சந்தித்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.

கணவருடன் ஒய்யாரமாக நடந்து வந்த நயன்தாரா கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்தார். தனியாக எப்போதும் போல வெள்ளை வேஷ்டி சட்டையில் வந்த நடிகர் தனுஷ் சிறிது தள்ளி சோபாவில் உட்கார்ந்து இருந்த வீடியோக்கள் வெளியாகி இருதரப்பு ரசிகர்களும் மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதே திருமண விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷை சந்தித்திருக்கிறார். ஆனால் நயன்தாரா மாதிரி தனுஷை தவிர்க்கவில்லை. சின்ன சிரிப்புடன் அவரை அரவணைத்தபடி அவர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இருவரும் சில நிமிடம் நலம் விசாரித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உங்க டெடிகேஷனுக்கு அளவு இல்லையா ஐஸ்வர்யாஜி? ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டோம்

sk_dhanush

sk_dhanush

Next Story