திரும்பி பாத்தா ஆள காணோம்...! விக்கியை தனியே தவிக்க விட்டு போன நயன்...
திருமணம் முடிந்து ஹனிமூனுக்காக சென்றார்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவரும் தாய்லாந்திற்கு சென்று தங்களது ஹனிமூனை மகிழ்ச்சியாக கழித்தார்கள். அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாக்கினார்கள்.
இந்த நிலையில் ஹனிமூன் முடிந்து நாடு திரும்ப உள்ளதாக விக்கி தனது இஸ்டாவில் நேற்று பகிர்ந்தார். ஹனிமூன் முடிந்து வந்தவுடன் அம்மணி விக்கியை தனியே தவிக்க விட்டு விட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்று விட்டாராம்.
கிட்டதட்ட 20 நாள்கள் மும்பையிலயே தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் வெளி நாட்டிலும் சூட்டிங் இருப்பதால் அங்கும் செல்ல இருக்கிறாராம்.
அது போக கோல்டு’ ’இறைவன்’ ’காட்பாதர்’ மற்றும் ’கனெக்ட்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாரூக்கானுடன் ஒரு பாடல் காட்சி இருப்பதால் அதற்காக தான் வெளி நாடு செல்ல போகிறார் என கூறிகிறார்கள். அது வரைக்கும் விக்கியின் நிலைமை?