விக்னேஷ் சிவனுக்காக உச்ச நடிகரை அசிங்கப்படுத்திய நயன்தாரா… வச்சு செய்யும் நடிகர்… போச்சா?
Nayanthara: நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டாராக இருந்த காலத்திலும் தற்போது தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் காலத்திலும் அவருடன் ஒரு நடிகர் இணைந்து நடிக்கவே மாட்டேன் என அடம் பிடித்து வருகிறாராம். அதுக்கு காரணமும் நயன் தானாம்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் எண்ட்ரியானவர் நயன்தாரா. முதல் படமே நல்ல வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட அவர் கேரியர் அங்கு உச்சம் அடையவில்லை. அதை தொடர்ந்து வல்லவன் படத்தில் சிம்புவுடன் காதல், லிப் கிஸ் என வேற லெவல் வைரல் ஆனார்.
இதையும் படிங்க: தளபதி69 இல்லங்க… தளபதி70 தான் விஜயின் கடைசி படம்… கசிந்த மாஸ் அப்டேட்.. போட்றா வெடிய…
அதை தொடர்ந்து சிவாஜி படத்தில் ஒற்றை பாடலுக்கு நடனம் ஆடி ரீ எண்ட்ரி கொடுத்தார். மெலிந்த தேகம் என ஆளே மாறிப்போய் இருந்தார். அங்கு தொடங்கியது அவர் ஆட்டம். நடிகை தனியாக நடித்தால் படம் ஹிட்டாகும் என அருந்ததிக்கு பின்னர் வரிசையாக நிரூபித்தவர் நயன் தான்.
கிட்டத்தட்ட லேடி சூப்பர்ஸ்டார் பட்டமும் பெற்றவர். நானும் ரவுதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தினை நடத்தி வருகின்றனர். நிறைய பிசினஸிலும் முதலீடு செய்து இருக்கிறார். கணவருக்காக பல இடங்களில் வாய்ப்பு கேட்பதையும் வழக்கமாக வைத்து இருக்கிறாராம்.
இதையும் படிங்க: வீக் எண்டுக்கு இது செம ட்ரீட்டு!.. சைனிங் உடம்பை காட்டி சூடேத்தும் ரச்சிதா!..
இப்படி பல முன்னணி நாயகர்களிடம் இணைந்து நடித்திருக்கும் நயனுடன் ஒரு நடிகர் மட்டும் நடிக்கவே முடியாது என மறுப்பு சொல்லி வருகிறாராம். அதாவது ஒரு விருது விழாவில் நயனுக்கு விருது கிடைக்க அப்போ விக்னேஷ் சிவனுடனான காதலில் இருந்தவர். அவர் கையால் தான் விருது வாங்குவேன் என்றாராம்.
ஆனால் அந்த விருதை கொடுக்க இருந்தவர் அல்லு அர்ஜூன். கிட்டத்தட்ட விருதை கொடுக்க மேடை வரை வந்த அல்லு அர்ஜூனுக்கு அதுக்கு தர்மசங்கடத்தினை தந்துவிட்டதால் இனி நயனுடன் நடிக்கவே போவதில்லை என முடிவெடுத்தாராம். 7 வருடங்களை தாண்டி சமீபத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்த போது அல்லு அர்ஜூன் நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms