விக்கியின் முதல் காதல் நயன்தாரா இல்லையாம்!.. அப்புறம் எப்படி இது நடந்துச்சுனு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் கடந்தாண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இருவரும் நானும் ரௌடிதான் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார்கள். அந்த படத்தில் இருந்தே இருவருக்கும் நல்ல நட்பு உருவானது.
அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி கடந்தாண்டு தான் இருவருக்கும் அனைவர் முன்னிலையில் சென்னை மகாபலிபுரத்தில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
திரையுலகை சார்ந்த பல பிரபலங்களும் இவர்களின் திருமணத்திற்கு வந்து வாழ்த்தினர். நடிகர் ரஜினிதான் இவர்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்தார் என்றும் செய்திகள் வெளியானது. மேலும் இவர்களுக்கு இரட்டை குழந்தைகளும் வாடகைத்தாய் மூலம் பிறந்தது. அவர்களுக்கு கூட சமீபத்தில் தான் பெயர் சூட்டு விழா நடத்தி அவர்களின் பெயரை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் முதன் முதலில் இணைந்த ‘ நானும் ரௌடிதான்’ படத்தை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியிருக்கிறார். அதாவது இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகை நயன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்க நயன் இந்தப் படத்தில் வாய் பேசமுடியாத காதுகேளாத ஒரு ஊனமுற்ற பெண்ணாக நடித்திருப்பார்.
அந்தப் படத்தில் நயனிம் நடிப்பு அதிகமாக பேசப்பட்டது. ஆனால் இந்தப் படத்தில் முதலில் நயன் நடிக்கிறதாக இல்லையாம். விக்னேஷ் சிவன் முதலில் நடிகை நஸ்ரியாவைத்தான் நடிக்க வைக்க வேண்டுமென்று நினைத்தாராம்.
ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தான் நயன் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகே நயன் இந்தப் படத்தில் உள்ளே வந்திருக்கிறாராம்.
இதையும் படிங்க : எம்.ஆர்.ராதா சொன்னத வச்சி எம்.ஜி.ஆரை கலாய்த்த சந்திரபாபு!.. தலைக்கு தில்லு அதிகம்தான்!…