Mookuthi Amman 2: ‘டெஸ்ட்’ படம் தோல்வி! நல்ல வேளையாக தப்பித்துக் கொண்ட சுந்தர் சி.. அம்மன் துணை இருக்குப்பா

by Rohini |   ( Updated:2025-04-14 00:06:48  )
nayan
X

nayan

Mookuthi Amman 2: சமீபகாலமாக நயன் தாராவின் ஆட்டிட்யூட் தாங்கமுடியாமல் கோடம்பாக்கமே ஸ்தம்பித்து வருகிறது. கடந்த மாதம் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் தொடக்க விழா பிரசாத் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு அமைச்சர் ஒருவர் முன்னதாகவே வர நயன் கொஞ்சம் தாமதமாக கெத்தாக வந்து இறங்கினார். இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் விளக்கமாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதாவது விழாவில் மற்ற நடிகைகளிடம் சகஜமாக பேசுவதை தவிர்த்துவிட்டு மூஞ்சியை காண்பித்திருக்கிறார் நயன். இவரை விட 90களில் டாப் நடிகையாக நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்தவர் மீனா. ஆனால் மீனாவிடம் நயன் சகஜமாக பேசினாரா என்றால் இல்லை. தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடிப்படையிலேயே கெத்து காண்பித்தார். அதை போல் ஒரு சீனுக்கு தேவையான காஸ்ட்யூமை கொண்டு போனால் இதுவேண்டாம் வேற காஸ்ட்யூம் தான் வேண்டும் என அடம்பிடித்தாராம்.

இதனாலேயே சுந்தர் சிக்கும் நயனுக்கும் இடையே சின்ன கருத்துவேறுபாடு கூட ஏற்பட்டிருக்கிறது. ஆனால் குஷ்பூ அதெல்லாம் இல்லை என்று சொன்னார். அப்படியே இருந்தது என்று சொன்னாலும் அது படத்திற்குத்தான் மைனஸாக போயிருக்கும். படம் பார்க்க வருபவர்கள் கதையை பற்றி யோசிக்காமல் நயன் மற்றும் சுந்தர் சிக்கு இடையே நடந்த பிரச்சினையை பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இத்தனை ஆட்டிட்யூட் இருந்தாலும் ஆரம்பத்தில் மிகவும் மனிதாபிமான பெண்ணாகத்தான் இருந்திருக்கிறார். ஒரு லைட் மேன் மயங்கி விழ அவரை தன் மடியில் வைத்து தேவையான உதவிகளை செய்தவர் நயன். அதை போல் தன் மேக்கப் மேனின் வீடு வெள்ளத்தால் பறி போக அவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தவர் நயன். அப்படி இருந்த நயன் இப்போ இப்படி மாற இந்த சினிமாதான் காரணம் என அந்தணம் கூறினார்.

ஏதாவது ஒரு வகையில் நயன் இந்த சினிமாவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கலாம். நம்பியவர்கள் இவருக்கு துரோகம் செய்திருக்கலாம். அதனாலேயே நம்மை சுற்றி இருக்கிறவர்கள் இப்படி இருக்கும் போது நாம் மட்டும் ஏன் இப்படி இருக்க வேண்டும் என்று கூட நினைத்து நயன் மாறியிருக்கலாம். ஆனால் நல்ல வேளையாக அவர் கடைசியாக நடித்து ரிலீஸான டெஸ்ட் படம் தோல்வியை தழுவியது.

இல்லையெனில் அந்த ஒரு வெற்றிக் களிப்பில் மூக்குத்தி அம்மன் 2 செட்டில் மீண்டும் தன் ஆட்டிட்யூட்டை காட்ட ஆரம்பித்திருப்பார் நயன். சுந்தர் சியும் தப்பித்தார் என அந்தணன் கூறினார்./

Next Story