ஏம்மா செஞ்சத செஞ்ச..தெளிவாக செஞ்சிருக்கலாம்ல?..தேவையில்லாமல் மாட்டிக் கொண்ட நயன்!..
தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் தற்காலிகமாக எழுந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர். ஆனால் இதை பற்றிய விவாதம் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. கடந்த ஜூன் 9 ஆம் தேதி இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் , படங்களில் நடிக்க என நயன் மிகவு பிஸியாகி விட்டார். திடீரென கடந்த 9ஆம் தேதி விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் எங்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று மகிழ்ச்சியான சம்பவத்தை பதிவு செய்ய அது இவ்ளவு பூதாகரமாக வெடிக்கும் என அவரே நினைத்திருக்க மாட்டார்.
இதையும் படிங்க : ரேவதி இடுப்பில் கை வைத்த பாரதிராஜா… மண்வாசனை படத்தில் நடந்த சம்பவம்… ஏன்னு தெரியுமா?
இந்த நிலையில் எல்லா சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயன் சில சான்றிதழ்களை சமர்ப்பித்திருக்கிறாராம்.அதாவது நயனுக்கும் விக்கிக்கும் 6 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்து விட்டதாகவும் அந்த திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான சான்றிதழ் இருப்பதாகவும் கூறிய நயன்,
இந்த வாடகை தாய் விவகாரம் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே நாங்கள் ஆரம்பித்து விட்டோம் என்றும் கூறி அரசை வாயடைக்க வைத்துள்ளார். இதன் மூலம் ரசிகர்களின் கருத்து என்னவென்றால் இதெல்லாம் தெரிந்த நயன் ட்விட் போடும்போது தெளிவாக விளக்கமளித்திருந்தால் தேவையில்லாத இந்த சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கமாட்டார் அல்லவா என்று கூறிவருகின்றனர். ஆனாலும் இவை எல்லாவற்றிற்கும் பின்னாடி காசு தான் இருக்கிறது என்று தான் தெரிகிறது.