நயன் இல்லனா திரிஷா… சூப்பர்ஹிட் அடித்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்… ஆனா?
Trisha: கோலிவுட்டில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை சரியாக கையாண்டு கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. அந்த வகையில் நயனின் சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க இருப்பது குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்பட்ட நடிகை நயன் தனிநாயகியாக பல படங்களில் நடித்து ஹிட் அடித்தார். சில படத்தில் முக்கிய இடத்தில் நடித்து தனக்கான இடத்தை உருவாக்கினார். அப்படி ஒரு படமாக நயன் அம்மன் வேடத்தில் நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் உருவானது. இப்படத்தினை ஆர்ஜே பாலாஜியை இயக்கி இருப்பார்.
இதையும் படிங்க: உங்களை பாத்தாலே பயமா இருக்கு!.. கேப்டன் விஜயகாந்தே பயந்த நடிகை யார் தெரியுமா?….
ஐசரி கணேஷ் தயாரித்த இப்படத்தில் தவறான சாமியார்களையும், மக்களின் மூடநம்பிக்கைகளையும் தோலுரித்துக் காட்டியிருக்கும். மேலும் பாலிவுட்டில் அமீர்கான் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான பிகே படத்தின் கதையை மையமாக வைத்தும் இப்படம் உருவாகி இருந்ததாக ஆர் ஜே பாலாஜி தன்னுடைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.
வித்தியாசமான கதைகளுக்கு பெயர் போன ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் சுமார் வெற்றியை மட்டுமே பெற்றது. இதனால் அடுத்த படத்தினை ஹிட் ஆகும் முயற்சியில் பாலாஜி இறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அந்த வகையில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல சத்யராஜை பார்த்து கொஞ்சம் நடிக்கக் கத்துக்கோங்க… வெளுத்து வாங்கிய பிரபலம்
ஆனால் இந்த முறை அம்மன் வேடத்தில் நயனுக்கு பதில் நடிகை திரிஷாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். தற்போதைய கோலிவுட்டில் நடிகை திரிஷா ட்ரெண்டில் இருப்பதால் அவர் நடித்தால் படத்திற்கு பிரமோஷன் ஆக அமையும் எனவும் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இப்படத்தை இன்னொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆர்.ஜே பாலாஜி இயக்க இருப்பதால் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் என பெயர் இடப்படாது எனக் கூறப்படுகிறது. ஆனால் இதுவும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கதையாக மட்டுமே உருவாக இருக்கிறது. படத்திற்கு வேறு டைட்டில் வைக்கவும் பாலாஜி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.