நயன்தாராவுக்கு கறார் கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்..அம்மணி ரியாக்ஷன் என்ன தெரியுமா?....
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது தமிழ் , ஹிந்தி போன்ற மொழிகளில் படமாக்கப்பட்டு வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜெயம் ரவியின் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மணி நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு வழியாக காதலித்த விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக ஒரு பக்கம் தன் திருமண வாழ்க்கையை கழித்துவருகிறார். தற்போது வெளியூர் பயணத்தில் விக்னேஷ் சிவனுடன் ஜாலியாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்கள் : எனக்காக அத எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துருக்காரு விஜய்!…தந்தையின் உருக்கமான பேச்சு!..
எப்பொழுது திருமணம் எப்பொழுது திருமணம் என கேட்கும் ரசிகர்களுக்கு ஒரு வழியாக அதை செய்து காட்டிவிட்டார். மேலும் இது ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாது கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக விக்னேஷ் சிவனை காதலித்து வந்ததால் எப்பொழுதும் திருமணம் செய்து கொள்வார் என்ற பயம் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஏனெனில் திடீரென படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் நடந்தால் தயாரிப்பாளர்களுக்கு தான் இழப்பு.
அந்த வகையில் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடிக்க அவரை அந்த பட தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசன் அணுகும் போது கூடவே ஒரு அக்ரிமெண்டையும் சேர்த்து காட்டியிருக்கிறார். அதில் படம் முடியும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று எழுதியிருந்ததாம். அதை பார்த்ததும் நயன் சிரித்து விட்டு இது தான் சரி, இப்படி தான் இருக்க வேண்டும். நான் ஒரு தயாரிப்பாளராக இருந்தால் இதை தான் பண்ணியிருப்பேன் என்று கூறி கையெழுத்தை போட்டாராம் நயன்.