Categories: Cinema News latest news

யம்மா காசு இருக்குனு இந்த பந்தா ஓவரு… நயன் வீட்டுக்கு புது எண்ட்ரி.. இத்தனை கோடியா?

Nayanthara: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அடையாளத்துடன் வலம் வந்த நயன் தாராவின் சமீபத்திய வளர்ச்சியை பார்த்த சிலருக்கு நெஞ்சு வலியே வரும் அளவுக்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்து இருக்கிறார் நயன். தமிழில் இறங்குமுகம் என்றாலும் பாலிவுட்டில் தொடக்கம் சிறப்பாகவே அம்மணிக்கு அமைந்து இருப்பதால் ஓவர் குஷியில் இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் வசூல் 1000 கோடியை நெருங்கி இருக்கிறது. இதனால் சில வாய்ப்புகளும் வந்தவண்ணம் இருக்கிறதாம்.

அஜித்தை போல ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், சமூக வலைத்தளங்களில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். சமீபத்தில் தான் இன்ஸ்டாவில் எண்ட்ரி கொடுத்தவர். ஜவான் படத்துக்கு ப்ரோமோஷன் செய்து அவர் புண்ணியத்தில் பல்லாயிரம் டிக்கெட் விற்பனை ஆனதாம்.

இதையும் படிங்க: அடிபொலி!.. நைட்டே சம்பவத்தை ஆரம்பித்த லியோ டீம்.. இன்னைக்கு செம கச்சேரி இருக்கு போல!..

இன்று அவர் நடிப்பில் வெளிவந்த இறைவன் படத்தினை பற்றி மூச்சுவிடாமல் இருந்து வந்தவர். படக்குழுவிடம் பெத்த தொகையை வாங்கி கொண்டே ஒரே ஒரு போஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறார். இதே நேரத்தில் தன்னுடைய ப்யூட்டி ப்ராண்ட்டினை ஒன்றினையும் தொடர்ச்சியாக ப்ரோமோட் செய்து வருகிறார்.

வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானார் நயன். இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை கணவருடன் ட்வின் டவர் முன்பு சமீபத்தில் தான் கொண்டாடினாஆர். ஒரு வருடமாக காட்டாத மகன்களின் புகைப்படத்தினையும் அன்று தான் வெளியுலகத்துக்கு காட்டினர்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: பழிவாங்கிய ராதிகாவை புகழ்ந்து தள்ளிய கோபி… ஓட்டிங்கில் மொத்தமாக கவுந்த பாக்கியா..!

இந்நிலையில் எல்லா விஷயத்தினையும் பிசினஸாக பார்க்கும் நயன்தாரா இனி அடிக்கடி மும்பை செல்ல வேண்டும் என்பதால் 25 கோடி மதிப்பில் சொந்தமாக ஒரு விமானத்தினை வாங்கி வைத்து இருக்கிறாராம். இதை கேட்ட பலருக்கு ரொம்பவே ஆச்சரியமாகி இருக்கிறதாம். விமானம் வைத்திருக்கும் முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையையும் நயனுக்கு தானாம்.

Published by
Akhilan