‘கனெக்ட்’ படத்தால் நயனுக்கு வந்த சோதனை!.. மதுரை புள்ளிங்கோ காட்டிய ஆட்டத்தால் நடுங்கிய மதுரை அன்பு..
திருமணம் , இரட்டை குழந்தைகளுக்கு தாய் என வாழ்க்கையில் பிஸியாக இருக்கும் நயன் இந்த நல்ல விஷயங்களுக்கு பிறகு அவரின் நடிப்பில் வெளியான படம் தான் கனெக்ட். இந்த படம் டிசம்.22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னரே படத்திற்கான டீசர் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகரித்தது.
டீசர் ஹாலிவுட் ரேஞ்சிற்கு திரில்லர் அடிப்படையில் இருந்ததால் படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்திருந்தன மக்கள் மத்தியில். இந்த படத்தில் நயனுடன் சத்யராஜ், நடிகர் வினய், மற்றும் ஹிந்தி நடிகர் அனுபம் கெர் ஆகியோர் நடித்திருந்தன. எந்த படத்திற்கான புரோமோஷன் விழாக்களிலும் கலந்து கொள்ளாத நயன் இந்த படத்தின் புரோமோஷனில் மட்டும் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க : எப்படியோ ஒரு தெளிவுக்கு வந்துட்டாரு வெற்றிமாறன்!.. விடுதலை படத்தின் ஹீரோ இவர் தான்..
காரணம் இந்த படத்தை அவரின் நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தான் தயாரித்திருந்தது. படத்தை ஏற்கெனவே மாயா மற்றும் கேம் ஓவர் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் தான் இயக்கியிருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் இல்லை. ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தயே கொடுத்தது.
மேலும் எல்லா ஊர்களுக்கும் புரோமோஷனுக்கு சென்ற நயன் மதுரை அன்புவிற்கு தொலைபேசியில் அழைத்து மதுரை ரசிகர்களுடன் படம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். இதுவும் ஒரு வித புரோமோஷன் தான். அவரும் வர சொல்லிவிட்டார். ஆனால் மதுரை ரசிகர்கள் அல்வா கொடுத்தது தான் மிச்சம்.
ஏனெனில் படத்தை பார்க்க யாருமே வரவில்லையாம். அதனால் நிலைமையை எடுத்துச் சொல்லி மதுரை அன்பு நயனை வரவேண்டாம் என சொல்லிவிட்டார். இதை நயனும் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அம்மணி கடும் அப்செட் ஆகிவிட்டாராம்.