அன்னிக்கு மட்டும் அது நடக்கலைனா?.. நயன் வாடகைத்தாய் விவகாரத்தில் சிக்கிய அந்த பெண்மணி!..

by Rohini |
NAYAN_main_cine
X

சமீபகாலமாகவே வாடகைத்தாய் விவகாரத்தில் சிக்கி தவித்து வந்த நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒரு வழியாக தங்களிடம் ஆதாரங்களை காட்டி முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். மேலும் தீபாவளியையும் தன்னுடைய இரட்டை குழந்தைகளுடம் மகிழ்ச்சியாக கொண்டாடிய வீடியோவையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

nayan1_cine

இந்த நிலையில் இந்த வாடகைத்தாய் விவகாரத்தால் விக்னேஷ் சிவனின் குடும்ப நண்பரான ஒரு தோழியின் வாழ்க்கையில் பெரும் புயலே ஏற்பட்டிருக்கிறது. அதாவது விக்னேஷ் சிவனின் அம்மாவான மீனா குமாரிக்கு நீண்ட நாளாகவே ஒரு தோழி இருந்தாராம். அவர் பெயர் விஷ்ணுப்பிரியா.

இதையும் படிங்க : தன்னுடைய மறைவிற்கு பின் ரிலீஸான 30 படங்கள்!..அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்!..

nayan2_cine

சிறு வயதில் இருந்தே நெருக்கமான தோழியாக இருந்திருக்கிறார். ஆனால் நயன் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க அவர் வாராவாரம் வெள்ளிக்கிழமையில் காளிகாம்பாள் கோவிலுக்கு செல்வது வழக்கமாம். அந்த ஒரு வெள்ளிக்கிழமையில் நயனும் விக்கியும் வரும் செய்தியை விக்கியின் அம்மா விஷ்ணுப்பிரியாவிற்கு தெரிவித்திருக்கிறார்.

nayan3_cine

அதை கேட்ட விஷ்ணுப்பிரியா அவர்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டுமென நினைத்து கோவில் வாசலில் நின்னு எடுத்திருக்கிறார்.அவ்ளோதான் அந்த ஒரு புகைப்படம் விஷ்ணுப்பிரியாவின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டதாம். ஏனெனில் அந்த புகைப்படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்கள், ரசிகர்கள் எல்லாம் இந்த பெண்மணி ஒருவேளை நயனுக்கு கருமுட்டை தானம் வழங்கியிருக்கலாம் எனவும், வாடகைத்தாயாக இருக்கலாம் எனவும் பத்திரிக்கைகளில் பல வதந்திகளை கிளப்பி விட விஷ்ணுப்பிரியாவின் குடும்பத்திலும் பெரிய சிக்கல் ஏற்பட்டுவிட்டதாம். இதை வெளிச்சம் போட்டு காட்டவே நேற்று ஒரு தனியார் சேனலுக்கு விஷ்ணுப்பிரியா பேட்டி கொடுத்தார்.

Next Story