கண்ணை கட்டும் பிரச்சினைகள்!.. குலதெய்வ வழிப்பாட்டிற்கு நயன் - விக்கி விசிட் அடித்ததின் பின்னணி!..
தமிழ் சினிமாவில் பரபரப்பு ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிதான். இவர்கள் 2021 ஆம் ஆண்டு உறவினர்கள் சம்மதத்துடன் சென்னை மகாபலிபுரத்தில் மிகவும் கோலாகலமாக திருமணத்தை நடத்தினர்.
திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களுக்கு இப்போது அழகான இரு குழந்தைகள் உள்ளனர். தன் குழந்தைகளுக்கு சமீபத்தில் தான் பெயர் சூட்டுவிழா நடத்தினார்கள்.
மேலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நயன் மற்றும் விக்கி தாராசுரம் வந்து தனது குலதெய்வ வழிபாட்டை நடத்தினார்கள். அவர்கள் வருவதை அறிந்த திருச்சி மக்கள் அவர்களை முற்றுகையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் இவர்கள் திடீரென குலதெய்வ வழிபாட்டை நடத்திய பின்னனியை வலைப்பேச்சு பிஸ்மி
கூறினார்.
அதாவது இவர்கள் திருமணத்திற்கு பின்பு நயன் மற்றும் விக்கி இருவருக்குமே இறங்கு முகமாகத்தான் இருக்கின்றது. இவர்கள் கூழாக்கல் என்ற திரைப்படத்தை தயாரித்து இன்னும் படம் வெளியாகமலே பிரச்சினையில் உள்ளன. மேலும் நயன் நடித்த கனக்ட் படமும் பெரிய ப்ளாப். அந்தப் படத்தில் சாட்டிலைட் உரிமமும், இன்னும் விற்றாகவில்லையாம்.
விக்னேஷ் சிவனுக்கு அஜித் படம் பறிபோன துயரம், இன்னொரு பக்கம் வந்த வாய்ப்புகள் எல்லாம் நயனை விட்டு பறிப்போகிற நிலைமை என பல்வேறு பிரச்சினைகளில் ஜோடி சிக்கி தவிக்கின்றனர். இவர்கள் திருமணம் நடந்த ஒரு சில மாதங்களில் கூட விக்கியின் உறவினர்கள் ‘இன்னும் அவர்கள் குலதெய்வ கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யவில்லை’ என்று வருத்தப்பட்ட வீடியோவும் வைரலானது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த ஜோடி குலதெய்வ கோயிலுக்கு வந்து வழிபட்டிருக்கின்றனர். இனிமேலாவது இருவருக்கும் ஏறுமுகம் வழங்குகிறாரா குலதெய்வ சாமி என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க : ராஜ்கிரண் ஹீரோ ஆனது யாரால் தெரியுமா?!.. இப்படி ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கா?…