ஹெல்ப் பண்றேன்னு போய் விளம்பரம் தேடிய நயன்தாரா!.. இதெல்லாம் ரொம்ப சில்லியா இருக்கே!

Published on: December 9, 2023
nayanthara
---Advertisement---

Nayanthara: ஆரம்பத்தில் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தனது முயற்சியினால் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை நயன்தாரா. என்னதான் இவர் மலையாள நடிகையாக இருந்தாலும் இவருக்கென அந்தஸ்தை பெற்று தந்தது தமிழ் சினிமாதான்.

இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு இப்படம் இவருக்கு முதல் படமாக இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களின் மூலம் சினிமாவில் தனக்கென தனி அந்தஸ்தை பெற்றார்.

இதையும் வாசிங்க:நீ பெரிய ஒழுங்கா?!.. காசுக்காக என்னவேணா பேசுவியா?!.. பயில்வானிடம் எகிறிய பப்லு!…

தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவு சம்பளம் வாங்கும் நடிகை நயன் மட்டுமே. அந்த அளவு இவர் உயர்ந்துள்ளார். மேலும் இவர் லேடி சூப்பர் ஸ்டார் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் நடித்த ஜவான் திரைப்படத்திற்கு பின் இவருக்கு பாலிவுட்டில் படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது. மேலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் நயன் சமீபத்தில் செய்த ஒரு செயல் மக்களை முகம் சுழிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் வாசிங்க:லோகேஷ் கனகராஜுக்கே செக் வைத்த ஹேக்கர்ஸ்… லியோ படத்தை வைத்து செய்த சதி..

சமீபத்தில் சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயலில் தவிப்பவர்களுக்கு பல பிரபலங்களும் பல வித உதவிகளை செய்து வருகின்றனர். நடிகர் சூர்யா, விஜய், அஜித் என அனைவருமே தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயனும் மக்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் ஒரு காரியத்தை செய்துள்ளார்.

இவரது சொந்த தயாரிப்பான சானிட்டரி நாப்கினை மக்களுக்கு உதவும் எண்ணத்தில் இவர் கொடுத்துள்ளார். ஆனால் கொடுத்தது மட்டுமல்லாமல் இவர் அதனை பெண்கள் கையில் கொடுத்து அதனை வைத்து விளம்பரப்படுத்தும் எண்ணத்தில் போட்டோ எடுத்துள்ளனர். இந்நிலையிலும் தங்களது பொருளுக்கு நடிகை நயன் விளம்பரம் செய்து கொள்வதாக எண்ணி மக்கள் அவரது பொருட்களை வாங்காமல் சென்றுவிட்டனராம். இந்த செயல் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிங்க:தண்ணில்லாம் வத்துன பிறகு boat-அ கொண்டு போய் என்ன செய்ய? சாப்பாடு போட்ட விஜய் இத செஞ்சாரா?

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.