தயவு செஞ்சு கல்யாணதுக்கு வந்துராதீங்க...நயன்தாரா இப்படி செய்தது யாரிடம் தெரியுமா?....

by Manikandan |   ( Updated:2022-06-08 08:02:29  )
தயவு செஞ்சு கல்யாணதுக்கு வந்துராதீங்க...நயன்தாரா இப்படி செய்தது யாரிடம் தெரியுமா?....
X

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக காதல் பறவைகளாக வலம் வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா நாளை திருமண பந்தத்திற்குள் நுழைய உள்ளனர். இந்த வைபவம் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இதனை வீடியோ எடுத்து ஒளிபரப்பும் உரிமையை பிரபல OTTT நிறுவனமான நெட்பிளிக்ஸ் தளம் வாங்கியுள்ளது. அதனை கச்சிதமாக வீடியோ எடுத்து கொடுக்கும் பொறுப்பு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளதாம்.

இந்த திருமண விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினி, விஜய் என பெரிய பெரிய விஐபிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். அதனால் நாளை தலைப்பு செய்தியே இவர்களது திருமணமாக தான் இருக்கும் என்பது தற்போதே உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் பத்திரிகையாளர்களை அழைத்து பேசி இருந்தார். நயன்தாரா-விக்னேஷ் சிவன் தரப்பு பத்திரிகையாளர்களை அழைத்துஇருந்தது. அதுவும் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க தான் அழைக்கிறார்கள் என்றும் அதற்காகத்தான் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு என்று பலர் நினைத்திருந்தனர்.

இதையும் படியுங்களேன் - கண்டிஷன் போட்டு தாக்கும் விக்னேஷ் - நயன்தாரா.! இதெல்லாம் கேட்டால் இப்போவே தலை சுத்துதே...

அப்படி நினைத்தவர்களுக்கு நேற்று ஏமாற்றமே கிடைத்ததாம். அதாவது ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஜூன் 11ம் தேதி உங்களை நான் நயன்தாராவுடன் இணைந்து வந்து சந்திக்கிறேன் என்று கூறி அனைவரையும் அனுப்பிவிட்டாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன். திருமணத்திற்கு வந்து விடுங்கள் என எதுவும் கூறவில்லையாம்.

nayanthara

இதன்மூலம் 9ஆம் தேதி திருமணத்திற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதை மறைமுகமாக விக்னேஷ் சிவன் கூறிவிட்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு கூட நயன்தாரா வரவில்லை என்பது பலருக்கும் வருத்தமாக இருந்ததாம்.

Next Story