மலையாளத்தில் தாராளம் காட்டும் நயன்.. தமிழ் தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுவது ஏன்?
மலையாள சினிமாவில் வாங்கும் சம்பளத்தினை விட தமிழில் நயன்தாரா 5 மடங்கு அதிகமாக வாங்கி வருகிறாராம் நயன். இத்தகவல் சினிமா வட்டத்தினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்களில் அதிகம நடித்து வருகிறார். இதனாலே தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.
நாயகியாக அவர் நடித்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நானும் ரவுடி தான் படத்தில் நடித்தப்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் வாடகை தாய் முறையில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகினார் நயன். திருமணம் முடிந்த நான்கு மாதத்திற்குள் நடந்த இச்சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாகி போனது. பலரும் நயனின் செயலுக்கு தொடர்ந்து கண்டனம் செலுத்தினர்.
இந்திய சட்டத்தின்படி இது நடக்கவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பலதரப்பில் கோரிக்கை எழுந்தது. 5 வருடத்திற்கு மேல் திருமணம் செய்து குழந்தை இல்லாதவர்கள் தான் வாடகை தாய் முறையை பயன்படுத்தலாம் என எல்லாரும் குரல் கொடுத்து கொண்டிருந்தனர். முதலில் அமைதியாக இருந்த நயன் தரப்பு எங்களுக்கு திருமணமாகி 5 வருடத்திற்கு மேல ஆகிவிட்டது என உரிய ஆவணங்களை சமர்த்து இந்த பிரச்னையை நீர்த்து போக செய்தனர்.
இந்நிலையில், படத்தில் நடிப்பதற்கு சில காலம் ப்ரேக் கொடுத்து தன் பிள்ளைகளுடன் நேரம் செலவழித்து வருகிறராம். அந்த நேரத்தில் இயக்குனர்களிடம் கதை கேட்டும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் மலையாள படங்களுக்கு ரூ1 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி வருகிறார். ஆனால் தமிழில் அவர் ரூ.5 கோடியை சம்பளமாக கேட்பதாக தகவல்கள் கிசுகிசுக்கிறது.
தற்போது நயனின் நடிப்பில் உருவாக இருக்கும் யானை சம்மந்தமான கதையில் நயன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 81வது படமாக உருவாகும் இப்படத்தினை ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறார்கள்.