பழைய நண்பர்களுடன் கூத்தடிக்கும் நயன்தாரா – தீடீரென இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவின் தற்போதைய நட்சத்திர நடிகையான நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழுக்கு நடிகையாக அறிமுகமானார். மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் தொலைக்காட்சியில் ஆங்கராக பணியாற்றி பின்னர் சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கு வந்தவர் நயன்தாரா.
ஐயா படத்தை தொடர்ந்து தமிழில் சந்திரமுகி, சிவகாசி , கஜினி , வல்லவன் , பில்லா , யாரடி நீ மோகினி, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே சமூக அக்கறையுள்ள அறம் படத்தில் நடித்தபோது அவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடியது.

இதையும் படியுங்கள்: கமல் மகள் மீது காதலில் விழுந்த சமந்தா கணவர் – ஆளு பலே கேடியா இருப்பான் போல…!
கோலிவுட் லேடிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பிடித்தார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இதற்கு முன்னர் சிம்பு, பிரபு தேவா உள்ளிட்டவர்களை காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிம்பு, தனுஷ் மற்றும் அனிருத்துடன் நயன்தாரா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சிறந்த நண்பர்கள் என கூறி வைரலாகி வருகிறது. இப்படி ஒரு ப்ரண்ட்ஷிப் மீண்டும் நெருக்கமானால் விக்கி கதை காலி தான்….





