நயன்தாராவா இது?.. சுந்தர்.சி ஷூட்டிங்கில் இப்படி மொத்தமா மாறிட்டாங்களே!.. காரணம் இதுதானா?…

ஐயா படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறியவர்தான் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என தன்னைத்தானே அழைத்துக்கொண்டவர் இவர். அதன்பின் இந்த பட்டமெல்லாம் எனக்கு வேண்டாம் என அறிக்கைவிட்டார். சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேல் நடித்துதான் நம்பர் ஒன் நடிகையாக மாறினார்.
சினிமாவில் நடிக்க வந்த புதிதில் அடக்கி வாசித்து இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிடித்த மாதிரி நடந்து கொண்ட நயன் எப்போது தன்னால்தான் படம் ஓடுகிறது என நம்பினாரோ அப்போதே அவரின் ஆட்டிடியூட் மாறிவிட்டது. பூஜைக்கு வரமாட்டேன், புரமோஷனுக்கு வரமாட்டேன் என சொல்ல துவங்கினார். எனவே, கோலிவுட்டில் இவரை லேடி அஜித் என்றும் நக்கலடிப்பார்கள்.
விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளுக்கு அம்மாவான பின் மேலும் பல கண்டிஷன்களை போட்டார். இவ்வளவு நேரம்தான் நடிப்பேன், சென்னையில் மட்டுமே ஷூட்டிங் வைக்க வேண்டும் என சொல்ல துவங்கினார். அதோடு, அவரோடு வரும் பலரின் சம்பளத்தையும் தயாரிப்பாளர் தலையில் கட்டினார்.
எனவே, தயாரிப்பாளர்கள் பலரும் நயன்தாரா மீது கோபப்பட்டார்கள். இந்நிலையில்தான் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க துவங்கினார். தன்னுடைய படங்களின் பூஜைக்கு போகாத நயன் மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் கலந்துகொண்டார். அதேநேரம், பூஜை நடக்கும் இடத்திற்கு போனவர் கேரவனிலேயே இருந்தார். பூஜை துவங்கும் போதுதான் கீழே இறங்கிவந்தார்.

அதன்பின் மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கில் நயன்தாரா நடந்துகொள்வதெல்லாம் சுந்தர்.சிக்கு பிடிக்கவில்லை. ஒத்துவரவில்லை என்றால் அவரை தூக்கிவிட்டு தமன்னாவை போட்டு படத்தை எடுக்கும் முடிவில் சுந்தர்.சி இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான் நயன்தாரா பற்றி நம்ப முடியாத செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
நயன்தாரா நிறைய மாறி இருக்கிறாராம். வழக்கமாக தன்னுடைய காட்சி முடிந்ததும் கேரவனுக்கு போய்விடும் அவர் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தளத்தில் தனது காட்சி முடிந்ததும் அங்கேயே சேர் போட்டு அமர்ந்து எல்லோருடனும் ஜாலியாக பேசி வருகிறாராம். சுந்தர் சி படப்பிடிப்பு தளம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். அது நயனுக்கு பிடித்துவிட்டதா இல்லை சமீபகாலமாக தன்னுடைய படங்கள் ஓடுவதில்லை என்பதால் நயன்தாரா மாறிவிட்டாரா என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம்.