ரசிகர்கள் கண்டுகொள்ளாத நயனின் கல்யாண கேசட்!.. இதுக்குதான் இவ்வளவு அக்கப்போறா!...

by சிவா |
nayanthra
X

#image_title

Nayanthara: ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. இவர் கேரளாவை சேர்ந்தவர். மலையாள பெண்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் முக்கியம் இடம் உண்டு. அப்படி பல வருடங்கள் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் நயன்தாரா. ஒருபக்கம் சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து சர்ச்சையிலும் சிக்கினார்.

கவர்ச்சி காட்டி சினிமாவில் ஒரு இடம் பிடித்த நயன் தனக்கென ஒரு மார்க்கெட் உருவானதும் அறம், மாயா போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். அதோடு, லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தையும் அவரே போட்டுக்கொண்டார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார்.

இதையும் படிங்க: Vijay TVK: விஜய் கட்சியில் இணைந்தாரா பிரபல நடிகை? வைரலாகும் வீடியோவைப் பாருங்க..!

சில வருடங்கள் இருவரும் ஜாலியாக ஊரை சுற்றி வந்த நிலையில் 2 வருடங்களுக்கு முன் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோராக மாறினார்கள். இந்நிலையில்தான் தனுஷை திட்டி நயன் வெளியிட்ட அறிக்கை 2 நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

நயன் தனது திருமண நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து Nayanthra Beyond the Fairy Tale என்கிற பெயரில் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்ப திட்டமிட்டு அதற்காக 27 கோடி விலையும் பேசினார். அந்த வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களை வைக்க திட்டமிட்டனர். ஆனால், அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி அளிக்கவில்லை.

அவரிடம் என்.ஓ.சி வாங்க பல வகைகளிலும் முயற்சி செய்த நயன்தாரா அது முடியாது என தெரிந்ததும் கோபத்தில் அவரை திட்டி பதிவு போட்டார். அதோடு, கல்யாண வீடியோவில் தனுஷ் என்.ஓ.சி கொடுக்காத காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இது தெரிந்து 10 கோடி கேட்டு நயனுக்கு நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ். இதுதான் நயனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ஆனால், தனுஷ் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர் இட்லி கடை படத்திற்காக பாங்காக்கில் இருக்கிறார். இந்த விவாகரத்தை சட்டரீதியாக மட்டுமே அவர் அணுகுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில், பல அக்கப்போருக்கு இடையே வெளியான நயனின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வரவேற்பை பெறவில்லை. இந்த வீடியோ பார்த்த சிலருக்கும் அது பிடிக்கவே இல்லை. இந்த வீடியோ பற்றி சமூகவலைத்தளங்களில் கூட யாருமே பேசவில்லை.

இதையும் படிங்க: Thalapathy 69: மீண்டும் விஜய்க்கு வில்லியா? செம காம்போ.. தளபதி 69 படத்தில் இணையும் அந்த நடிகை

Next Story