திருமண விழாவில் நயன்!.. அட நம்ம தனுஷும் போயிருக்காரே!.. அதுவும் இவ்வளவு பக்கத்துலயா!..

nayanthara
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் திருமணத்தில் நடிகை நயன்தாராவும், தனுஷும் கலந்து கொண்ட வீடியோ படு வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த அறிக்கை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தனது டாக்குமெண்டரியில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் 3 வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்கின்றார் என்று கூறி தனுஷை காட்டமாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: ஏ.ஆர் ரகுமானுக்கும், மோகினி டேக்கும் தொடர்பா?!… கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்!…
இந்த அறிக்கையானது சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சில தினங்களாக இதுதான் ஹாட்டாபிக்காக ஓடிக் கொண்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு அவரின் பிறந்த நாளான நவம்பர் 18ஆம் தேதி அவரின் ஆவணப்படம் வெளியானது. தனுஷுக்கு எதிராக புகார் தெரிவித்த பிறகு முதன் முறையாக ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றார் நடிகை நயன்தாரா.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷும் வந்திருக்கின்றார். நடிகர் தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை திரைப்படத்தை dawn pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தான் தயாரித்து வருகின்றார். அவரின் திருமண வரவேற்பு தான் இன்று நடைபெற்று இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களில் விக்னேஷ் சிவனுக்கு உதவி இயக்குனராக இருந்தவரும் ஆகாஷ் பாஸ்கரன் தான்.

nayan dhanush
இவர் தான் dawn pictures தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த தயாரிப்பு நிறுவனத்தில் தான் இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை தனுஷ் தயாரித்து வருகின்றார். இவரின் திருமணத்தில் தற்போது திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோர் இந்த திருமண விழாவில் பங்கேற்று இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி உடன் நயன்தாரா அமர்ந்து பேசுவது போன்ற வீடியோவும் வெளியானது. இதனைத் தொடர்ந்து தனுஷ் வரவில்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் நடிகர் தனுஷும் இந்த திருமண விழாவில் பங்கேற்று இருக்கின்றார்.
இதையும் படிங்க: கங்குவா ஓவர்!.. அடுத்து உனக்குதான் வெயிட்டிங்!.. ஆர்.ஜே.பாலாஜிக்கு காத்திருக்கும் ஆப்பு!…
நடிகர் தனுஷும், நடிகை நயன்தாராவும் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை என்றாலும் பெரிய சர்ச்சைக்குப் பிறகு இருவரும் ஒரே நிகழ்ச்சியில் சந்தித்திருப்பது கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Dhanush & #Nayanthara together at the recent wedding of Producer AakashBaskaran pic.twitter.com/ulZDckjak8
— AmuthaBharathi (@CinemaWithAB) November 21, 2024