உன்ன பார்த்தா பிரபுதேவா மாதிரி இருக்கே.? விக்கி – நயன்தாராவை வெறுப்பேற்றிய மூத்த சினிமா பிரபலம்.!

Published on: July 29, 2022
---Advertisement---

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும்  ” நானும் ரௌடி தான்”  என்ற படத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் காதலிக்க தொடங்கினர்.  கடந்த 7  வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் ஜூன் மாதம் தங்களது பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் கோலாலமாக நடைபெற்றது. திருமணத்தில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆசீர்வாதத்தை அவர்களுக்கு வழங்கி இருந்தனர்.  நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பே பிரபு தேவாவை காதலித்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செய்திகள் வெளியானது அனைவர்க்கும் தெரியும்.

இதையும் படியுங்களேன்- தியேட்டர் அதிபராகும் சூர்யா.! மொத்தமாக இத்தனை திரையரங்குகளா.?! இனி எல்லாம் 100 நாள் தான்..

இந்நிலையில், நானும் ரௌடி தான் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கியிருந்தார். இதனையடுத்து, படபிடிப்பில் நடந்த சில சுவாரஸ்யமான தகவலை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்
நடித்திருந்த ராகுல் தாத்தா சமீபத்திய ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

prabhu_mian_cine

இது தொடர்பாக பேசிய அவர் ” விக்னேஷ் சிவனை பார்க்கையில் எனக்கு பிரபு தேவாவை பார்ப்பது போல இருக்கும். இதனை நான் அவரிடமே கூறியுள்ளேன். அப்புறம் நயன்தாராவிடம் சென்று அவரிடமும் விக்னேஷ் அவனை பார்த்தால் பிரபு தேவாவை பார்ப்பது போல இருக்கிறது என்று சொன்னேன்” என தெரிவித்துள்ளார். இப்போது ராகுல் தாத்தா கூறிய இந்த கருத்தை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகள் பார்த்தால் கண்டிப்பாக மனக்கசப்பு ஏற்படும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.