
Cinema News
வாழ்நாளில் காணாத தட்சணை.! நயன்தாரா திருமணத்தை நடத்திய புரோகிதர்களின் மலைக்க வைக்கும் சம்பளம்.!?
சில வாரங்களுக்கு முன்னர் தான் நீண்ட வருட காதல் ஜோடிகளாக தமிழ் திரையுலகில் சுற்றித்திரிந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமண பந்தத்திற்குள் நுழைந்தனர்.
இவர்களின் திருமண செய்தி தான் அப்போது ஹாட் டாபிக். தற்போது வரை ஏதேனும் ஒன்று பேசுபொருளாக மாறி வருகிறது. அப்படி தான் அவ்வப்போது நயன்தாரா அணிந்திருந்த ஆடை, அணிகலன்கள் என்ன விலை தெரியுமா என அவ்வப்போது செய்திகள் வெளியாகும்.
அப்படி தான் தற்போதும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பது தான்.
இதையும் படியுங்களேன் – தனுஷுக்காக காத்திருக்கும் 50 கோடி… தீவிரமான கதை விவாதத்தில் பழம்பெரும் இயக்குனர்.!
அதாவது மொத்தம் 5 புரோகிதர்கள் வந்துள்ளார். அவர்களுக்கு தலா 5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். இதுவரை இவ்வளவு சம்பளம் எந்த திருமணத்திலும் அவர்கள் வாங்கியதே இல்லையாம். இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனராம்.