திருப்பதி கோவிலில் சர்ச்சையில் சிக்கிய நயன் - விக்கி ஜோடி.....இது தேவையா?....

by Saranya M |
திருப்பதி கோவிலில் சர்ச்சையில் சிக்கிய நயன் - விக்கி ஜோடி.....இது தேவையா?....
X

தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடைபெற்றது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க அதை வாங்கி இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் கட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த திருமணத்தில் கலந்து கொள்ள பாலிவுட்டில் இருந்து நடிகை ஷாருக்கான் வந்திருந்தார். நடிகை பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள மலையாள நடிகர் திலீப் மற்றும் கோலிவுட்டை சேர்ந்த சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் குடும்பம் சகிதமாக வந்து மணமக்களை வாழ்த்தினர்.

சிகப்பு நிற சேலையில், நயன்தாரா மகாராணி போல மணமேடைக்கு வரும் புகைப்படங்களும், பட்டு வேட்டி சட்டையில் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் வருகை தந்த புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், திருமணம் முடிந்த நிலையில், ஜூன் 10ம் தேதியான இன்று திருப்பதி கோயிலுக்கு இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பார்க்க பெருங்கூட்டமே திருப்பதியில் அலைமோதிய வீடியோக்கள் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளன. கூட்டத்தில் ஒருவர் நயன்தாரா கையை பிடித்து இழுக்க, நயன்தாரா முறைக்க சில சலசலப்புகளும் அரங்கேறின.

எல்லாவற்றுக்கும் மேலாக திருப்பதி திருமலை கோயில் அருகே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடத்திய போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட்டும் அப்போது நயன்தாரா மற்றும் அவர்களை போட்டோ எடுத்தவர்கள் காலில் செருப்பு அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் போர்டு அறிக்கை வெளியிடும் அளவுக்கு திருப்பதியில் அந்தளவுக்கு அக்கப்போர் செய்துள்ளனர். திருமணத்தை மட்டும் அங்கே நடத்தியிருந்தால் இன்னும் என்னவெல்லாம் கூத்து நடந்திருக்குமோ என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Next Story