
Cinema News
திருமண கோலத்தில் நயன்தாராவை கிஸ் அடிக்கும் விக்னேஷ் சிவன்……தாறுமாறா வைரலாகும் புகைப்படம்….
கடந்த 7 வருடங்களாக காதலித்து, லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை தங்கும் விடுதியில் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது.
இந்த திருமண விழாவில் மணிரத்னம், ரஜினி, ஷாருக்கன், அட்லீ, போனிகபூர், டிடி, கார்த்தி, விஜய் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணத்திற்கு வருபவர்கள் யாரும் செல்போன் எடுத்து வரக்கூடாது, புகைப்படம் எதுவும் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நயன்தாரா திருமணம் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் காலை முதல் வெளிவரவே இல்லை.
இந்நிலையில், திருமண கோலத்தில் நயனும்,விக்கியும் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், நயனுக்கு தலையில் விக்னேஷ் சிவன் முத்தம் கொடுக்கும் ரொமான்ஸ் காட்சி இடம் பெற்றுள்ளது.