இவருக்கெல்லாம் ஜோடியா நடிக்க முடியாது: ஓட்டம் பிடித்த நயன்தாரா......

கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இதர தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். நயன்தாரா நடிப்பில் தமிழில் இறுதியாக அண்ணாத்த படம் வெளியாகியுள்ள நிலையில் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் கதை படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நயன்தாரா தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற லூசிபர் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்கள். இந்த படத்தில் தான் நயன்தாரா தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கிறார்.

nayanthara
இப்படத்தில் நயன்தாராவின் கணவர் கேரக்டரில் நடிப்பதற்கு சத்ய தேவ் என்ற சிறிய நடிகரை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதனால் டென்சன் ஆன நயன்தாரா எனக்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்க கூடாது என படத்தின் இயக்குனர் மோகன் ராஜாவிடம் மிகவும் கறாராக கூறியதாக டோலிவுட்டில் இருந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
தென்னிந்திய திரையுலகில் நயன்தாரா ஒரு டாப் நடிகை என்பதால் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிக்க விரும்புகிறாராம். அதன் காரணமாகவே சத்ய தேவ் போன்ற வளர்ந்து வரும் நடிகர்களுடன் ஜோடி சேர மறுப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

jeyam raja
மற்றொரு மலையாளத்தில் இந்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தாராம். தற்போது அவர் கேரக்டரில் தான் சத்ய தேவ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தில் இந்த கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாம். அதன் காரணமாகவும் நயன்தாரா இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் படக்குழுவினர் சத்ய தேவை ஒப்பந்தம் செய்து விட்டதால், நயன்தாராவை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அவர் சம்மதிப்பாரா என்பது தெரியவில்லை. நயன்தாரா சம்மதித்தால் மட்டுமே படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகருமாம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.