நயன்தாரா இப்படி நடந்துக்கிட்டது ஒன்னும் புதுசு இல்ல… ஜீவா பட ஷூட்டிங்கில் நடந்த களேபரம்!!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, பல வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து சில மாதங்களில் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இந்த செய்தி இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியதை நாம் அறிந்திருப்போம்.
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் தங்களது இரட்டை குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனீல் என் சிவன், உலக் தைவக் என் சிவன் என்று பெயர் சூட்டினார்கள். இந்த நிலையில் இன்று தஞ்சாவூரில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட இருவரும் சென்றனர். அப்போது இவர்களை காண அங்கு கூட்டம் கூடியது. மேலும் பத்திரிக்கையாளர்கள் பலரும் தம்பதியினரை புகைப்படம் எடுக்க முந்தியடித்தனர்.
கடுப்பான நயன்தாரா
இது போன்ற செயல்கள் தம்பதியினருக்கு எரிச்சலையூட்டியதாக தெரியவருகிறது. உடனே விக்னேஷ் சிவன், “நாங்க சாமி கும்பிடதாங்க வந்திருக்கோம். எங்களை தொந்தரவு செய்யாதீங்க” என கூறியிருக்கிறார்.
ஆனாலும் அவர்கள் முந்தியடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது கடுப்பான நயன்தாரா, “உங்களுக்கு அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என கண்டித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், ஜீவா பட படப்பிடிப்பில் நயன்தாரா கோபத்துடன் நடந்துகொண்டது குறித்து ஒரு சம்பவத்தை கூறியுள்ளார். அதாவது “திருநாள்” என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்துக்கொண்டிருந்தபோது கும்பகோணத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.
பெயர் சொல்லி கூப்பிட்ட சிறுவன்
அப்போது அந்த ஊரைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன், “ஹே நயன்” என்று நயன்தாராவை பார்த்து கூப்பிட்டானாம். நம்மை ஒரு சிறுவன் மரியாதை இல்லாமல் பெயரை சொல்லி கூப்பிட்டுவிட்டான் என்ற கோபத்தில் நயன்தாரா, “அவனை பிடிங்க” என்று அங்கிருந்தவர்களிடன் கூறினாராம். அந்த சிறுவன் ஓடிவிட்டானாம். அப்போது இயக்குனர், நயன்தாராவிடம் “அந்த பையன் கூட உங்க பெயரை தெரிந்துவைத்திருக்கிறான் என்றால் நீங்கள் எவ்வளவு பிரபலமாக இருக்கிறீர்கள் என்று நினைத்து பாருங்கள்” என கூறினாராம். அதன் பிறகுதான் நயன்தாரா சமாதானம் ஆனாராம்.