விஜயதசமி அதுவுமா இது தேவையா? - சர்ச்சையை கிளப்பிய நயன்தாரா பட டீசர்..
ஐயங்கார் வீட்டு பெண்ணாக நடிகை நயன்தாராவை அன்னபூரணி படத்தின் டீசரில் காண்பித்துள்ள இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா டீசலில் சர்ச்சைக்குரிய காட்சியை வைத்திருப்பதாக நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா நடிப்பில் பல ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் எப்போது ஆரம்பிக்கிறது என்றும் தெரியவில்லை, எப்போது ரிலீசாகி தியேட்டரை காலி செய்கிறது என்றும் தெரியவில்லை. அந்த அளவுக்கு பல படங்கள் தொடர்ந்து ஃபிளாப் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: நான் ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன்.. அட நம்ம லெஜண்ட் அண்ணாச்சியை பார்த்தீங்களா.. விஜயதசமிக்கு கலக்குறாரே!..
ஆனாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார்.
டியூட் விக்கி உடன் இணைந்து மண்ணாங்கட்டி எனும் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, அதற்கு முன்னதாக தனது 75 ஆவது படம் என அறிவிக்கப்பட்ட அன்னபூரணி படத்தில் நடித்துள்ள நிலையில் அதன் டீசர் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியானது.
இதையும் படிங்க: தளபதி 68 பூஜை வீடியோ ரிலீஸ்!.. பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா என காஸ்டிங்கே கலர்ஃபுல்லா இருக்கே!
சமீப காலமாக சினிமாவில் சாதிய பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், ஐயர் வீட்டில் வளரும் பெண்ணான அன்னபூரணி ரகசியமாக வீட்டிற்கு தெரியாமல் அசைவ உணவுகளை செய்வது எப்படி? என தனது புத்தகத்தில் மறைத்து வைத்து படிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே நடிகை ஜோதிகா அருள் படத்தில் திருட்டுத்தனமாக பிரியாணி சாப்பிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அப்போதே அந்த படத்திற்கு கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், தற்போது நயன்தாராவும் அதே சர்ச்சையில் சிக்கியுள்ளார் எனக் கூறுகின்றனர்.
மேலும், படத்தின் டைட்டிலுக்கு கீழ் The Goddess of Food என சப் டைட்டில் கொடுத்துள்ளனர். அசைவம் சமைப்பது தான் உணவு கடவுளின் வேலையா? என்றும் அந்த பிரிவினர் மனம் இதை பார்த்தால் புண்படாதா? என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் நயன்தாராவை விளாசி பதிவிடப்பட்டு வருகிறது.