உண்மையறிந்து விலகிய நயன்தாரா.!? விழிபிதுங்கி நிற்கும் விக்னேஷ் சிவன்.!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவரும் அழைக்கும் வண்ணம் ஏன், தனது திரைப்பட டைட்டில் கார்டில் போட்டுகொள்ளும் வண்ணம் வளர்ந்து நிற்கிறார் நயன்தாரா. தான் வெறுமனே ஹீரோவுடன் டூயட் மட்டும் பாடிக்கொண்டு, இரண்டு பாட்டுக்கு குத்தாட்டம் மட்டும் போட்டு கொண்டு இருந்திராமல்,
கதைக்கு முக்கியத்துவம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததால் தான் இவருக்கு இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்துள்ளது. இவர் பெரும்பாலும், தனது திரைப்பட ப்ரோமோஷன் விழாக்களில் கலந்துகொள்வதில்லை.
ஆனால், தான் தயாரிக்கும் ஒரு சில படங்களுக்கு ப்ரோமோஷன்களில் வந்துள்ளார். நெற்றிக்கண் பட விளம்பர டிவி நிகழ்ச்சி, ராக்கி ப்ரோமோ பாடல் என தனது படத்தை தொடர்ந்து விளம்பரபடுத்தி வந்தார். இதனால் அவர் மீது விமர்சனமும் வைக்கப்பட்டது. தான் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் இப்படி செய்கிறாரே என கூறப்பட்டது.
இதையும் படியுங்களேன் - பொன்னியின் செல்வனை விலை பேசிய OTT நிறுவனம்.! இதுதான் எங்க நம்பிக்கை., வேண்டாம் பிளீஸ்..
தற்போது இந்த உண்மைகளை அவர் அறிந்துவிட்டாரோ என்னவோ, இன்று வெளியாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தாலும், தானே அதில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் , தானும் அதில் ஒரு தயாரிப்பாளர் என்றாலும் அதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள வில்லை.
அதன் காரணமாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை தனது பட ஹீரோ விஜய் சேதுபதி உடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் சென்று பட ப்ரமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறார். இதனை பார்த்த பலர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே விரிசல் என வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.