மனைவி நடிக்கும் படங்கள் என்றால் மும்பைக்கே குழந்தைகளை அழைத்துக் கொண்டு பாடிகார்டாக சென்று விடுவார் விக்னேஷ் சிவன். ஆனால், அவருடைய புதிய படத்தின் பூஜையில் மனைவி நயன்தாரா கலந்து கொள்ளாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதில் காமெடி என்னவென்றால் ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போகிறார் என வதந்தி கிளம்பியது. அதன் பின்னர் அக்கா ரோலில் நடிக்கிறார் என்றும் கூறினர். ஆனால், தற்போது பட பூஜையில் நயன்தாரா பங்கேற்காத நிலையில், இந்த படத்துக்கும் அவருக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.
இதையும் படிங்க: டேக் ஆப் ஆன விக்கி – பிரதீப் படம்.. கலர்புல்லா நடந்த பூஜை!.. புகைப்படங்கள் உள்ளே!..
லவ் டுடே படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் முதல் படத்தில் இவானாவை ஜோடியாக்கிய நிலையில், தற்போது டோலிவுட் நடிகை கீர்த்தி ஷெட்டியை ஜோடியாக்கி உள்ளார்.
லவ் டுடே என ஆங்கில தலைப்பில் அவரது முதல் படம் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திற்கு எல்ஐசி என இன்சூரன்ஸ் கம்பெனி பெயரை டைட்டிலாக வைத்துள்ளனர். எல்ஜிஎம் படத்தை போல இதற்கும் பெரிய அர்த்தத்தை விக்னேஷ் சிவன் வைத்திருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரொம்ப மோசம்.. பாத்ரூம் கூட இல்லை!.. அந்த இடத்துல இன்ஃபெக்ஷன் வந்துடுச்சு.. அம்மு அபிராமி கதறல்!..
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான அன்னபூரணி படம் பெரிதாக ஓடாத நிலையில், அடுத்து மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார் லேடி சூப்பர்ஸ்டார். பிரதீப் ரங்கநாதன் படத்தில் அவர் எந்தவொரு கதாபாத்திரத்திலும் நடிக்க மாட்டார் என்றே தெரிகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…