மூக்குத்தி அம்மன் 2வுக்கு வந்த நயன்தாரா!.. மாதவனின் டெஸ்ட் பட விழாவுக்கு வரலையே.. ஏன் தெரியுமா? 

by Saranya M |
மூக்குத்தி அம்மன் 2வுக்கு வந்த நயன்தாரா!.. மாதவனின் டெஸ்ட் பட விழாவுக்கு வரலையே.. ஏன் தெரியுமா? 
X

#image_title

நயன்தாரா, மாதவன், சிந்தார்த், மீரா ஜாஸ்மின் போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள டெஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று அந்த படத்தின் டிரைலர் லான்சில் நயந்தாராவை தவிற மற்ற அனைவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

பல படங்களை தயாரித்து வந்த எஸ். சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகியுள்ள முதல் படம் டெஸ்ட். இந்த படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாதவன் ஒரு விஞ்ஞானியாக போராடுபவராகவும், சிந்தார்த் கிரிக்கேட் வீரராகவும், நயன்தாரா ஒரு ஆசிரியராகவும் நடித்துள்ளனர்.இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சோதனைகளிலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறார்கள் என்பதை கதை களமாக உருவாக்கியுள்ளனர்.

YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ்.சசிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் டெஸ்ட் படத்தில் மாதவன், நயந்தாரா, சிந்தார்த், மீரா ஜாஸ்மின் , காளி வெங்கட், நாசர், வினய் வர்மா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். நடிகை மீரா ஜாஸ்மின் கம்பேக்காக இந்த படம் அமைந்திருகிறது. டெஸ்ட் படத்திறகு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நயன்தாராவை தவிர டெஸ்ட் பட குழுவினரான மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டனர்.

நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜையில் மட்டும் கலந்து கொண்டது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். பெரிய பட்ஜட் படத்திற்கான நிகழ்ச்சிகளில் மட்டும் தான் நயன்தாரா பங்கேற்பாரா சின்ன பட்ஜட் படங்களை எல்லாம் கண்டுக்க மாட்டாரா என கேள்வி எழுப்பி திட்டி வருகின்றனர்.

நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாகவே பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதை தவிர்த்து வருகிறார். மேலும் அவர் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் டெஸ்ட் பட விழாலில் கலந்துக்கொள்ள முடியவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. மூக்குத்தி அம்மன் 2விலேயே நயன்தாராவுக்கும் சுந்தர். சிக்கும் பிரச்சனை என வதந்திகள் கிளம்பின. குஷ்பு அதெல்லாம் இல்லை என ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இப்போ அடுத்து டெஸ்ட் டிரைலர் வெளியீட்டு விழா சர்ச்சையில் சிக்கியுள்ளார் நயன்தாரா.

Next Story