Categories: latest news

அட ஆத்தாடி.. நயன் விக்கி திருமண டாக்குமெண்ட்ரிக்கு இத்தனை கோடியா? அப்போ தனுஷ் கேட்டது நியாயம் தானே?

Nayanthara: நயன்தாரா திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்த தொகை குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக அழைக்கப்பட்டு வந்த நயன்தாராவின் சினிமா வாழ்க்கை திருமணத்திற்கு பின்னர் மிகப்பெரிய அடி வாங்கியது. பிரபல நடிகர்கள் யாரும் நயன்தாராவை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்ய விரும்பாமல் இருந்தனர். தனிநாயகியாக அவர் நடித்த திரைப்படங்களும் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க: AR Rahman: மனைவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட 3 கண்டிஷன்கள்!.. லீக் ஆன தகவல்!…

இதைத்தொடர்ந்து தன்னுடைய ஆதிக்கம் குறைந்து கொண்டு வருவதை அறிந்த நயன்தாரா பிசினஸ் பக்கம் தன்னுடைய ஆர்வத்தை திருப்பினார். அந்த வகையில் தொடர்ச்சியாக பெண்களுக்கான அழகு சாதன நிறுவனமான நைன் ஸ்கின், நாப்கின் பிராண்ட் உள்ளிட்டவைகளை வரிசையாக அறிமுகம் செய்தார்.

தொடர்ச்சியாக தன்னுடைய திருமணத்தையும் வியாபாரம் செய்ய முடிவெடுத்தார். அந்த வகையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா திருமணம் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அதற்கு முன்னால் அவர் செய்த திட்டங்கள் அதிகம்.

தமிழ்நாட்டின் முக்கிய கோவில்களுக்கு கணவருடன் சென்று செய்தியாளர்கள் கண்ணில் சிக்கி வைரல் ஆனார். இதை தொடர்ந்து அவருடைய திருமண நாளில் வரும் யாருக்கும் மொபைல் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட படங்களைத் தவிர அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் யாரிடமிருந்தும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: விவாகரத்துக்கு காரணம்!… சாய்ரா பானுவின் வழக்கறிஞர் சொல்வது என்ன?!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!…

இதை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் திருமண வீடியோவை வெளியிட இரண்டு வருடம் இழுத்தது. ஆனால் இதை லாபகமாக நடிகர் தனுஷ் நானும் ரவுடிதான் திரைப்படப் பாடலுக்கு அனுமதி கொடுக்கவில்லை அதனால் தான் இந்த கால தாமதம் என தன்னுடைய சமீபத்திய அறிக்கையில் நயன்தாரா குறிப்பிட்டிருந்தார்.

சட்டபூர்வமாக அவர் நடவடிக்கையை எடுத்தும் கூட குறிப்பிட்ட அந்த காட்சிகளை நயன்தாரா தன்னுடைய டாக்குமெண்டரியில் நீக்கவில்லை. இப்போதே இவ்வளவு தைரியமாக வெளியிடும் நயன்தாரா இதை இரண்டு வருடத்திற்கு முன்னரே செய்திருக்கலாமே என்ற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது.

இது மட்டும் அல்லாமல் தற்போது நயன்தாராவின் பியாண்ட் தி ஃபேரி டேல் திருமண டாகுமெண்டரிக்கு 20 கோடி வரை பேசி இருக்கலாம் என தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போதைய தகவல்களின்படி 80 முதல் 100 கோடி வரை நயன்தாரா இந்த டாக்குமெண்டரிக்காக ஒப்பந்தம் செய்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் கசந்து இருக்கிறது.

இவ்வளவு பெரிய தொகை என்பதால் தான் நயன்தாரா தன்னுடைய டாக்குமெண்டரிக்காக பல வழிகளில் ப்ரோமோஷன் தேடியதும் தற்போது கசிந்திருக்கிறது.

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

3 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago