தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. பல வருடங்களாக தனது மார்க்கெட்டை தக்க வைத்து வரும் நடிகை இவர். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்.

சரி விஷயத்திற்கு வருவோம். நயன்தாராவுக்கு போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை பல வருடங்களாக இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது. அதுவும் 2 வீடுகளை அவர் வாங்கியுள்ளார். விரைவில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு அந்த வீட்டில் செட்டில் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வீட்டை அவர் தனது அலுவலகமாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ரஜினிக்கு போயஸ் கார்டனில் வீடு இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் அங்குதான் வசித்து வந்தார். அதன்பின் தனுஷ் அங்கு வீடு கட்டினார். ஜெயம்ரவியும் அங்கு வீடு வாங்கினார். தற்போது அந்த பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
