நீங்க இல்லன்னா நான் இல்லை… பத்திரிக்கையாளர் காலில் விழுந்த நயன்தாரா…

தமிழில் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார்.
சந்திரமுகி திரைப்படம் ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடி பெரும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதைத் தொடர்ந்து நயன்தாராவின் மார்க்கெட்டும் அதிகமானது. பிறகு தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற துவங்கினார் நயன்தாரா.

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் முதலிடத்தில் இருக்கிறார் நடிகை நயன்தாரா. ஆனால் சினிமாவிற்கு நடிக்க வந்த புதிதில் பல பிரச்சனைகளை சந்தித்தார் நயன்தாரா.முக்கியமாக காதல் தொடர்பாக அதிகமான பிரச்சினைகளை சந்தித்தார். நடிகர் சிம்புவுடன் காதல் முறிவிற்கு பிறகு நயன்தாரா பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதையே விட்டு விட்டார்.
அதன் பிறகு சில காலங்களுக்கு நயன்தாராவை குறித்த எந்த ஒரு செய்தியும் பத்திரிகைகளில் பெரிதாக வராமல் இருந்தது அப்பொழுது ஒரு மூத்த பத்திரிகையாளர் மட்டும் நயன்தாரா குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார்.

திரும்பவும் பேட்டி கொடுத்த நயன்தாரா:
அதன் பிறகு சில காலங்கள் கழித்து பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதுதான் திரும்ப பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார் நயன்தாரா. அந்த சமயத்தில் அந்த மூத்த பத்திரிகையாளரும் கூட அந்த பேட்டிக்கு வந்திருந்தார்.
அப்போது அவரைப் பார்த்த நயன்தாரா அவர்களின் காலில் விழுந்து வணங்கினார் நீங்கள் எழுதிய அந்த கட்டுரை என் சினிமா வாழ்வு மேம்பட முக்கிய காரணமாக இருந்தது அதற்கு நன்றி என்று கூறினார் நயன்தாரா.

இவ்வளவு நாள் பத்திரிக்கையாளர்களை மதிக்காமல்தான் நயன்தாரா யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை என பலரும் நினைத்துக் கொண்டிருக்க, அவருக்கு இருந்த மன அழுத்தத்தால்தான் அவ்வளவு நாள் பத்திரிக்கையாளரை பார்க்காமல் இருந்தார் என்கிற விஷயம் இந்த நிகழ்வின் மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிந்துள்ளது.இந்த நிகழ்வை பிரபல சினிமா பத்திரிகையாளரான செய்யாறு பாலு தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.