இனிமே அதிகமா செட்ல பார்க்க முடியாது போல!.. இப்படித்தான் வீட்ல ஹேப்பியா இருக்க போறாரு போல நயன்தாரா!

by Saranya M |   ( Updated:2023-12-25 10:52:09  )
இனிமே அதிகமா செட்ல பார்க்க முடியாது போல!.. இப்படித்தான் வீட்ல ஹேப்பியா இருக்க போறாரு போல நயன்தாரா!
X

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரு மகன்களான உயிர் மற்றும் உலகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தமிழில் நயன்தாராவுக்கு எந்தவொரு பெரிய படமும் கிடைக்கவில்லை. சமீபத்தில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடித்த 75வது மைல் ஸ்டோன் திரைப்படமான அன்னபூரணி படம் அட்டு ஃபிளாப் ஆகி விட்டது.

இதையும் படிங்க: சலாருக்கு சங்கு ஊதிய சபாநாயகன்!.. தமிழ்நாட்டுல பிரபாஸ் நிலைமை இப்படி கவலைக்கிடமா ஆயிடுச்சே பாஸ்!..

அந்த பயத்தின் காரணத்தால் தான் யாரும் தன்னை லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க வேண்டாம். அப்படி சொன்னா திட்டுறாங்க என பேசியிருந்தாரோ என ரசிகர்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர். படத்தின் தயாரிப்பாளர் தான் திட்டியிருப்பார் என்பதை தான் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் நயன்தாரா என்றும் அப்போ புரியல.. இப்போ புரியுது என அவருடைய முன்னாள் காதலர் சிம்பு பட மீம்களையும் போட்டு வருகின்றனர்.

அதற்கு காரணம் 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நயன்தாராவின் அன்னபூரணி படம் வெறும் 80 லட்சம் ரூபாய் தான் வசூல் அடைந்ததாக வெளியான தகவல்தான் காரணம் என்கின்றனர். அட்லீயின் தயவால் இந்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு அந்த படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தாலும் தென்னிந்தியாவில் அவர் நடித்து வெளியான பல படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நிலையில், அவரது மார்க்கெட் சரிவை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க: சரக்கு அடிச்சுட்டுத்தான் ஸ்டோரியே எழுதுவேன்! அதான் படம் அப்படி இருக்கு – காரித் துப்பிய ரசிகர்கள்

டயானா மரியம் குரியனான நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து இந்து பண்டிகைகளை கொண்டாடி வருவதும் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருவதும் வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில், மனைவிக்கு பிடித்த கிறிஸ்துமஸ் பண்டிகையையும் தனது மகன்களுடன் விக்னேஷ் சிவன் கொண்டாடி உள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. சினிமாவில் மார்க்கெட் காலியாவதை அறிந்து தான் பிசினஸ் பக்கம் ஒதுங்கி விட்டார் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், சீக்கிரமே அடுத்து ஒரு வெயிட்டான படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Next Story