விக்னேஷ் சிவனை கிஸ் அடிச்சி வாழ்த்து சொல்லும் நயன்தாரா!.. உங்க ரொமான்ஸ் வேற லெவல்!.

Published on: September 18, 2023
nayan
---Advertisement---

போடா போடி திரைப்படம் மூலம் இயக்குனரானவர் விக்னேஷ் சிவன். நயன்தாராவை அவர் இயக்கிய திரைப்படம் நானும் ரவுடிதான். இந்த படம் உருவானது போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பின் இருவரும் சில வருடங்கள் காதல் ஜோடியாக ஊரை சுற்றி வந்தனர்.

சினிமா விழாக்களில் ஜோடியாக கலந்து கொள்வது, வெளிநாட்டில் ஜாலியாக நேரம் செலவிடுவது, பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என இருவரும் ரொமான்ஸ் செய்து வந்தனர். போன வருடம் ஜூன் மாதம் இருவரும் சிறப்பாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தண்ணியில புருஷனுடன் ஜாலியாக ஜல்சா பண்ணும் நயன்தாரா!.. செம ரொமான்ஸு போ!..

அதன்பின் வாடகை தாய் மூலம் இருவமும் இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். இந்த விஷயம் சர்ச்சையில் சிக்கியது. ஆனாலும், முறையான ஆவணங்கள் இருப்பதாக அவர்கள் சொல்லவே அந்த விஷயம் அடிபட்டு போனது. இப்போது குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது, சினிமாவில் நடிப்பது என பிஸியாக வலம் வருகிறார் நயன்தாரா.

nayan

மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து சமீபத்தில் வெளியான ஜவான் படத்திலும் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றி நயன்தாராவை பாலிவுட் ரசிகர்களிடமும் பிரபலப்படுத்தியது. எனவே, தொடர்ந்து மற்ற சில பாலிவுட் நடிகர்களுடனும் நயன்தாரா நடித்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

nayan

இந்நிலையில், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். ஏற்கனவே அவரின் பிறந்த நாளை முன்னிட்டு நயன் நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியானது. மேலும், தனது வீட்டில் விக்கியின் பிறந்தநாளை நயன் குழந்தைகளுடனும், கணவருடன் கொண்டாடியுள்ளார்.

இதையும் படிங்க: போனஸ் மேல போனஸ அள்ளி வீசும் சன்பிக்சர்ஸ்…எல்லாம் ஜெயிலர் செஞ்ச வேலைதான்…

nayan

அதில் ஒரு புகைப்படத்தில் கணவர் விக்கியின் மூக்கில் நயன்தாரா முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

nayan

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.