சமந்தாவின் பெரிய வாய்ப்பை தட்டி பறித்த நயன்தாரா.? எல்லாம் 'அந்த' நபரின் சிபாரிசு தான் காரணமாம்.!?

நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் அட்லி, அடுத்ததாக பாலிவுட் பக்கம் களமிறங்கியுள்ளார். அங்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ஜவான் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ அண்மையில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இதையும் படியுங்களேன் - தனுஷை கண்டு தெறித்து ஓடும் நடிகைகள்.! இந்த லிஸ்டில் புதியதாக 'அந்த' சென்சேஷனல் நடிகை.!?

இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். ஆனால், முதலில் இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு சமந்தா தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தாராம்.

ஆனால், கடைசி நேரத்தில் சமந்தா மாற்றப்பட்டு நயன்தாரா இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகி விட்டாராம். இதுபற்றி சினிமா வட்டாரத்தில் இயக்குனர் அட்லி நயன்தாரா இருவரும் நெருங்கிய நண்பர்கள். இயக்குனர் அட்லிக்கு தெறி திரைப்படத்தை இயக்க விஜய்யிடம் கதை கூற சிபாரிசு செய்ததே நயன்தாராதான். அதன் காரணமாகத்தான் தற்போது பழசை மறக்காமல் நயன்தாராவை ஹீரோயினாக புக் செய்துள்ளார் அட்லி எனவும் கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகின்றனர்.

Related Articles
Next Story
Share it