Connect with us

ஓரே ஒரு குத்து பாட்டுக்கு சம்மதித்த நயன்தாரா.! கேட்டது விஜய் பட மெகா ஹிட் இயக்குனராச்சே.!

Cinema News

ஓரே ஒரு குத்து பாட்டுக்கு சம்மதித்த நயன்தாரா.! கேட்டது விஜய் பட மெகா ஹிட் இயக்குனராச்சே.!

விஜயை வைத்து திருப்பாச்சி எனும் மெகா ஹிட் படத்தை தனது முதல் படமாக இயக்கியவர் பேரரசு. இவருடைய படங்களில் அடுக்குமொழி வசனங்கள் இருக்கும். ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் இருக்கும்.  திருப்பாச்சி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் படத்தை இயக்கி இருந்தார் பேரரசு.

தளபதி விஜய் –  இயக்குனர் பேரரசு இணைந்த இரண்டாவது படம் சிவகாசி. இந்த படத்தில் ஹீரோயினாக அசின் நடித்து இருந்தார். இதுவும் திருப்பாச்சி போல அண்ணன் – தங்கை பாசம் பற்றிய கதைக்கலாமாக தான் இருந்தது. பிரகாஷ் ராஜ் விஜயின் அண்ணனாகவும், வில்லனாகவும் நடித்திருப்பார்.

இந்த படத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் நயன்தாரா ஆடியிருப்பார். முதலில் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்துவிட்டு, பெரிய ஹீரோயினை படக்குழு தேடுகையில், இயக்குனர் சாய்ஸ் நயன்தாராவாக இருந்ததாம்.

இதையும் படியுங்களேன் – நடிகர்களின் வெளிநாட்டு பயணத்தின் பின்னணி.! எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரையில்…,

ஆனால், ஒரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் என்றவுடன் நயன்தாரா யோசித்தாராம். அப்போது தான் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார் நயன். அதனால் யோசித்தாராம். பின்னர் இந்த குத்து பாட்டில் நயன்தாரா நடிகை நயன்தாராவாகவே வருகிறார். கிளாமர் ட்ரெஸ் எதுவும் கிடையாது.  இதனை அறிந்து அந்த பாடலில் விஜய்க்கு நிகராக ஆட்டம் போட்டு கலக்கி இருந்தார்.

இந்த தகவலை அண்மையில் இயக்குனர் பேரரசு ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இயக்குனர் பேரரசுக்கு முதல் இரண்டு படம் அளவுக்கு அடுத்து இயக்கிய அஜித் படம் உட்பட எந்த படமும் பெரிய வெற்றியை பெற தவறியது என்பதே உண்மை.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top