நயன்தாரா ஏன் இந்த மாதிரி முடிவு எடுத்தானு தெரியல.. வேதனையில் பேசிய பிரபல நடிகை...!
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் என செல்லமாக அழைக்கப்படுபவர். 5 வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு நடிகையாலும் தாக்குப் பிடிக்க முடியாத சினிமாவில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராகவே திகழ்ந்து வருகிறார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்புதான் இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சென்னை மாமல்லபுரத்தில் திருமணம் நடந்தது. சுமார் 7 வருடங்களாக காதலித்து இருவரும் திருமண பந்தத்திற்குள் புகுந்துள்ளனர். இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிலையில் இவரின் முன்னால் காதல் அனுபவம் பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெப் சீரிஸ் தொடர்களை இயக்கி வரும் நடிகை குட்டி பத்மினி நயன்தாராவை பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபுதேவாவுடனான காதலை அறிந்தவுடன் தான் ஷாக் ஆனதாகவும் பீக்கில் இருக்கும் நேரத்தில் இது தேவைதானா எனவும் அதுவும் திருமணமான நபருடன் ஒரு முன்னனி நடிகை இப்படி ஒரு செய்கையில் ஈடுபடுவது சரியானதா எனவும் ஏன் இந்த மாதிரி முடிவு எடுத்தார் நயன் என தான் ரொம்ப வருத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும் அந்த காதலில் இருந்து வெளிவந்து மிகவும் சிரமப்பட்டு மீண்டு வந்து இப்பொழுது ஒரு நல்ல உயரத்தை அடைந்ததை எண்ணி சந்தோஷப்படுவதாகவும் கூறினார். அவரை போல் ஒரு தைரியமான பெண்ணை பார்த்ததில்லை எனவும் கூறினார். ஏன் இந்த அளவிற்கு வேதனை அடைந்தார் எனில் நயன் அடிக்கடி குட்டி பத்மினி வீட்டிற்கு சென்று விருந்துகள் எல்லாம் சாப்பிட்டு இருக்கிறாராம்.இவர்களுக்குள் நல்ல நட்புறவு இருக்கிறதாம்.