Categories: Entertainment News

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!.. போட்டோவா போட்டு 90ஸ் கிட்ஸ் சாபத்தை வாங்கும் நயன்தாரா!

சம்மர் ஆரம்பிக்கும் முன்பே துபாய், சவுதி அரேபியா என தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் டூர் அடித்து வரும் நயன்தாரா தொடர்ந்து போட்டோக்களாக போட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார். அதிலும், இன்னமும் திருமணம் ஆகாமல் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களின் சாபம் உங்களை சும்மா விடாது என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கமெண்ட்டுகளாக போட்டு கதறி வருகின்றனர்.

மகளிர் தினத்தை முன்னிட்டு துபாய்க்கு சென்ற விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் தங்கள் குழந்தைகளான உயிர் மற்றும் உலகத்தை உடன் அழைத்து சென்றனர். ஆனால், அவர்கள் வெளியிடும் புகைப்படங்களில் குழந்தைகளை காணவில்லை.

இதையும் படிங்க: 8 வயதிலேயே நடன இயக்குனராக பணிபுரிந்த ஜெயலலிதா! யாரும் அறிந்திராத ஜெ.வின் இன்னொரு பக்கம்

அதற்கு பதிலாக இன்னமும் காதலர்களாகவே ஜோடி போட்டு சுற்றுவது போல நயன்தாரா ரசித்து ரசித்து விக்னேஷ் சிவன் எடுக்கும் போட்டோக்களும், இருவரும் இருக்கும் புகைப்படங்களாக வெளி வந்துக் கொண்டே இருக்கின்றன.

நயன்தாரா சோஷியல் மீடியாவுக்கு வந்ததும் வந்தார். தொடர்ந்து அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை போதும் போதும் இத்தோட ஸ்டாப் பண்ணிக்கலாம் என சொல்கிற அளவுக்கு அதிகமாகிக் கொண்டே போகிறது.

இதையும் படிங்க: கேப்டன் போல மாறிய கமல்!.. ரஜினிக்கு வந்த நெருக்கடி!.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!…

எஃப் 1 கார் ரேஸ் பந்தயத்தை பார்க்க சமீபத்தில் சென்ற இருவரும் பேக்கிரவுண்டில் கார் ஒன்று இருக்கும் இடத்தில் நின்றபடி எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். கருப்பு நிற கோட் சூட் உடையில் லேடி சூப்பர் ஸ்டார் செம கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்தும் விக்கி தான் போட்டோக்களை போடுகிறாரா என ரசிகர்கள் தொடர்ந்து அதே கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Published by
Saranya M