ரூ 50 லட்சம் அபேஸ்.... தயாரிப்பாளரை நாசம் பண்ண நயன்தாரா!

nayanthara
தயாரிப்பாளருக்கு நஷ்டம் கொடுத்த நடிகை நயன்தாரா!
மலையாளத்தில் பிறந்து வளர்ந்து தமிழுக்கு நடிக்க வந்த நயன்தாரா ஆரம்பத்தில் லோக்கல் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். பின்னர் ஐயா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து சந்திரமுகி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி , வில்லு, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, தனி ஒருவன், நானும் ரௌடி தான், விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் பெரிதாக பிரபலமாகவில்லை என்றாலும் செகண்ட் இன்னிங்ஸ் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கினார். தற்போது இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்கள். அதன் பின்னர் அவருக்கு அதிர்ஷடம் அடிக்க லேடிய சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார்.

nayanthara
இதையும் படியுங்கள்: அடாது மழையிலும் விடாது டப்பிங்… டான் படத்தின் முழுவீச்சில் சிவகார்த்திகேயன்!
இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் நயன்தாரா குறித்த சர்ச்சையான கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது, நயன்தாரா படப்பிடிப்பு வரும் போது 7 அசிஸ்டன்ட் உடன் தான் வருவாராம். அதில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம். 50 நாட்கள் ஷூட்டிங் சென்றால் ரூ.52 லட்சம் தண்டம் அழவேண்டும். அது இல்லாமல் அந்த அம்மா ரூ. 6 கோடி சம்பளம் வாங்குறாங்க. இப்படியெல்லாம் பண்ணா தயாரிப்பாளர்கள் வாழ்வை இழந்து நடுத்தெருவுக்கு தான் வரவேண்டும் என காட்டமாக கூறியுள்ளார்.