எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!.. நயன்தாராவிடம் சரண்டரான ஜெயம் ரவி.. கருணை காட்டிய மூக்குத்தி அம்மன்!..

ஷாருக்கானின் ஜவான் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தே வர முடியாது என ராங்கு காட்டிய நயன்தாரா ஜெயம் ரவியின் இறைவன் பட புரமோஷனுக்கு மட்டும் வந்து விடுவாரா என்ன? என்கிற நிலை இருந்தது.
புரமோஷனுக்கு வரமுடியாது என்கிற நிலையிலும், ஷாருக்கானின் ஜவான் படத்தின் புரமோஷனை இன்ஸ்டாகிராமில் நடிகை நயன்தாரா செய்திருந்தார்.
இதையும் படிங்க: குட்டிக்கதையை விட இமேஜ் தான் முக்கியம்… கோபம் குறையாத மனைவி சங்கீதா..! விஜயின் நிலைமை திண்டாட்டம் தான்!
அதே போல ஜெயம் ரவியின் இறைவன் படத்துக்கு இன்ஸ்டாகிராமில் புரமோஷனை பண்ணியிருக்கலாமே என கேள்வி எழுந்த நிலையில், கள்ள மெளனம் காத்து வந்த நயன்தாரா, தற்போது திடீரென இறைவன் படத்துக்கு புரமோஷன் செய்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஷாருக்கான் நிறுவனம் வெயிட்டாக கவனித்த நிலையில் தான் இன்ஸ்டாகிராமிலும் லேடி சூப்பர்ஸ்டார் போஸ்ட் போட்டார் என்று தெரிந்தும் இதுவரை நயன்தாராவுக்கு புரமோஷனுக்காக எந்தவொரு பைசாவும் கொடுக்காமல் இருந்து வந்த ஜெயம் ரவியின் இறைவன் படக்குழு டிக்கெட் புக்கிங்கில் மிகப்பெரிய அடி விழுந்து இருப்பது தெரிந்த நிலையில், கடைசி நேரத்தில் மூக்குத்தி அம்மன் உண்டியலில் காணிக்கையை செலுத்தி விட்டார் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
இதையும் படிங்க: வாய்ப்புக்காக ஏங்கிய விக்ரமா இப்டி? அம்மாவுடன் சென்று தயாரிப்பாளரிடம் சண்டை போட்ட சம்பவம்!..
கையில காசு, வாயில தோசை என்கிற கணக்காக எல்லாவற்றையும் வியாபாரமாக செய்து வரும் நயன்தாரா கடைசி நேரத்தில் ஜெயம் ரவியின் இறைவன் படம் நாளை வெளியாகிறது என ஒரு போஸ்டரை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு புரமோஷன் செய்துள்ளார்.
ஷாருக்கானின் ஜவான் படத்தை முன்னிட்டு நயன்தாரா வெளியிட்ட போஸ்டரை பார்த்து தான் தமிழ்நாட்டில் பல லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அதே போல ஜெயம் ரவியின் இறைவனுக்கும் நயன்தாரா இறைவியாக இருந்து உதவுவார் என படக்குழுவே நம்பி காத்திருக்கிறது.