நயனின் நடத்தையில் இப்படி ஒரு மாற்றமா..? ஆடிப் போன படக்குழு...!

by Rohini |
nayan_main_cine
X

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாகவும் வலம் வருகிறார். சமீபகாலமாக பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தது தான் கடைசியாக நடித்த படம்.

nayan1_cine

அதன் பின் இருவருக்கும் திருமணம் ஆனது. ஹனிமூனை கொண்டாட வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் இவரை பற்றி செய்தி அரசல் புரசலாக இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னவெனில் விக்னேஷ் சிவன் நயனின் வாழ்க்கையில் வருவதற்கு முன் எதற்கு தலை சாய்ப்பவர் நயன்தாரா.

nayan2_cine

அது வேண்டும் இது வேண்டும் என ஆசைப்பட மாட்டார். படத்திற்கேற்ப எந்த மாதிரியான கதாபாத்திரமானாலும் நடிக்க தயார் என்று இருந்த இவர் விக்னேஷ் சிவன் வந்ததுக்கு அப்புறம் முழுசாக அவரது நடத்தையில் மாற்றம் தெரிவதாக கூறிவருகின்றனர்.

nayan3_cine

சமீபத்தில் வெளியான அவரது o2 படத்தில் பள்ளத்தில் சிக்கிய பஸ்ஸில் நயன் உட்பட பலரும் இருப்பார்கள். அந்த காட்சியில் என் மேல் சிறிதளவு மண் கூட படக் கூடாது. மீறி விழுந்தால் நடிக்க மாட்டேன் என கூறினாராம்.இந்த மாதிரி ஏகப்பட்ட கண்டீசன்களை போட்டாராம். படத்திற்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என கூறிய நயனிடம் இப்படி ஒரு மாற்றத்தை கண்ட படக்குழு அவருக்கேற்ப வளைந்து கொடுத்து சென்றுள்ளனர்.

Next Story