திருமணம் முடிந்த கையோடு சிகிச்சைக்கு செல்லும் நயன்....அட செல்லத்துக்கு என்னாச்சு!....
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் நானும் ரௌடி தான் படத்தின் மூலம் மலர்ந்தது. அந்த படத்தில் நயன் நாயகியாக நடிக்க விக்னேஷ் சிவன் படத்தை இயக்கினார்.
அதிலிருந்தே இருவரும் காதலிக்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் இவர்கள் வருகிற 9ஆம் தேதி வாழ்க்கையில் ஒன்றாக இணைய இருக்கிறார்கள். இவர்களின் திருமணம் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நயன்தாராவை பற்றி சமீபத்தில் மூத்த பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரெங்கநாதன் விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில் நயன்தாரா ஏதோ பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டதாகவும் அதனால் தன்னுடைய பழைய அழகு கவர்ச்சி எல்லாம் மாறி விட்டதாகவும் கூறுகிறார். மேலும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கூட சமந்தா காட்டிய கவர்ச்சி நயன்தாரா காட்டவில்லை. ஏனெனில் கவர்ச்சி இருந்தால் தானே காட்ட முடியும் என்றும் பயில்வான் கூறினார்.
அதனால் திருமணம் முடிந்த கையுடன் அல்லது ஜூன் இறுதியில் கேரளா செல்ல இருக்கிறாராம். அங்கு சென்று 6 மாத காலம் ஆயுர்வேத சிகிச்சை முடித்து விட்டு தான் வரப் போகிறார் எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார்.